|
|
|
By
Kavinthan Shanmugarajah 2012-09-03 18:19:26 |
|
கையடக்கத்தொலைபேசியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தினசரி அதிகரித்துக் கொண்டு செல்கின்றது.
இந்நிலையில் கழிப்பறையில் இருப்பதை விட கையடக்கத்தொலைபேசியில் 10 மடங்கு பக்டீரியாக்கள் காணப்படுவதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.
கையடக்கத்தொலைபேசிகளை உபயோகிப்பவர்கள் அதனைச் சுத்தம் செய்வதில்லை. மேலும் தாங்கள் பயன்படுத்தும் கையடக்கத்தொலைபேசிகளை மற்றவர்களுக்குக் கொடுக்கும்போது அவர்களிடம் காணப்படும் பக்டீரியாவும் இந்த கையடக்கத்தொலைபேசியில் ஒட்டிக்கொள்கிறது.
கையடக்கத்தொலைபேசியை வாய், மற்றும் காதுடன் ஒட்டி வைத்துப் பேசுவதாலேயே பக்டீரியாக்கள் எளிதில் தொற்றிக்கொள்கின்றன . பின்னர் இந்தக் கையடக்கத்தொலைபேசியை யார் யார் பயன்படுத்துகின்றனரோ அவர்களுக்கெல்லாம் இந்த பக்டீரியா தொற்றிக் கொள்கிறது என ஆய்வின் முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இவை பல நோய்களை உண்டாக்குவதாகவும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளே இவ் ஆய்வினை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் முடிவு சற்று அதிர்ச்சியளிப்பதாகவே உள்ளது.
பாவனையாளர்கள் தங்கள் கையடக்கத்தொலைபேசியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும் இதன்மூலம் நோய்கள் ஏற்படுவதைத் தடுத்துக்கொள்ள் முடியுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
|
|
||||
| Interesting | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
|
|
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------