Reporting Sri Lanka News in Tamil
 

சவூதி எதிர்க்கும் இணையமுகவரிகள் .gay, .islam!

Share
By Kavinthan Shanmugarajah
2012-08-16 12:44:11

சவூதி அரசாங்கமானது .gay, .islam, .bar, .baby என முடிவடையும் இணையத்தள முகவரிகள் உபயோகத்துக்கு வருகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
 
இணையத்தளங்கள் தொடர்பான பல்வேறு செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைப்பான Internet Corporation for Assigned Names and Numbers (ICANN) .com, .org என முடிவடையும் இணைய முகவரிகளைப் போல .gay, .islam, .bar, .baby போன்ற சுமார் 1,927 வார்த்தைகளை அறிமுகப்படுத்த உத்தேசித்துள்ளது.
 
ஆனால் புதிதாக உபயோகப்படுத்தப்படவுள்ள சில வார்த்தைகளுக்கு பல நாடுகள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
 
svu6
 
அதில் சவூதி அரேபியா முக்கிய பங்கு வகிக்கின்றது. .gay என்ற வார்த்தை கலாசார சீரழிவுக்கு வழிவகுப்பதுடன் ஓரினச் சேர்க்கையை ஊக்குவிக்குமென எச்சரித்துள்ளது.
 
இதேவேளை .islam என இணையமுகவரியைப் பயன்படுத்துவது ஏற்றதல்ல எனவும் தனிப்பட்ட அமைப்போ, நபரோ இம்முகவரியைப் பயன்படுத்தும் போது அது மொத்த இஸ்லாமிய சமூகத்தையும் பிரதிபலிப்பதாக அமையும் என சவூதிஅரசு தெரிவிக்கின்றது.
 
மேலும் .baby போன்ற பெயர்களை ஆபாச  இணையத் தளங்கள் பயன்படுத்தும் சாத்தியக்கூறு நிலவுவதாக சவூதி அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
 
இதைத்தரவிர .shia என்ற வார்த்தைக்கும் சவூதி அரசாங்கம் தனது எதிர்ப்பைக் காட்டியுள்ளது.

Share
Interesting
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57
  வாருங்கள்..! கேக் சாப்பிடலாம் 2013-04-11 10:50:46
  கவர்ச்சி நாய்கள் 2013-04-08 11:41:23

 

Cinema
  அஜீத் படத்தில் பாடும் ‘கானா’ பாலா 2013-05-22 11:09:06
  ஒரே நாளில் ரிலீஸ்: விஜய், சூர்யா படங்கள் போட்டி 2013-05-21 11:27:10
  ரெய்னா- ஸ்ருதி நெருக்கம்? 2013-05-18 10:41:55
  ‘என்னவளே அடி என்னவளே’ பாட்டு பாடி சமந்தாவை கவர்ந்த நடிகர் சித்தார்த் 2013-05-15 11:25:03
Feature
  காற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்! 2013-05-20 13:53:27
  ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கிய ‘அம்மா’ எனும் உன்னத வார்த்தை 2013-05-12 09:25:36
  பெற்றோரைப் பலியெடுத்த ஓரினச் சேர்க்கை 2013-05-03 11:07:05
  திருமலை அலஸ்தோட்ட மசாஜ் சென்ரர்களில் நடப்பது என்ன? 2013-04-29 11:07:00
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online