|
|
|
By
Priyarasa 2012-09-15 12:23:05 |
|
யாழ்.மாவட்டத்தில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணை எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் 20 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த விசாரணையை கொழும்பில் இருந்து வருகை தரவுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் மேற்கொள்ளவுள்ளார்கள்.
முதல் கட்டமாக 2006 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள் சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கான அழைப்பாணைகள் யாழ்ப்பாணம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளன.
காணாமல்போனவர்களின் பகுதிகளைச் சேர்ந்த கிராம அலுவலர்களையும் தம்மிடம் உள்ள காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் சம்பந்தமான விபரங்களையும் கொண்டு வரும்படி பணிக்கப்பட்டுள்ளது.
|
|
||||
| Cinema | |||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||
Feature |
|||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||

Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------