Reporting Sri Lanka News in Tamil
 

முகமூடி - விமர்சனம்

Share
By General
2012-09-01 06:22:37

ஹொலிவூட் சுப்பர் ஹீரோக்களை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு கொலிவூட் சுப்பர் ஹீரோவை அறிமுகம் செய்து வைத்திருக்கும் படமாக பெரும் எதிர்பார்ப்புக்களை சுமந்து வெளிவந்திருக்கும் படமே இந்த முகமூடி.

பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இப்படத்தினை யூடிவி மோசன் பிக்ஸர் தயாரிக்க மிஷ்கின் தந்திருக்கும் புது முயற்சியான இந்த சுப்பர் ஹீரோ கதை மக்களை ஆட்கொள்ளுமா என பார்ப்போம்.

இந்திய மானிலங்கள் பலவற்றில் செல்வந்தர்களின் வீடுகளை கொள்ளையடிக்கும் முகமூடி கும்பல் ஒன்று சென்னையிலும் தங்களது கைவரிசையை காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் குங்பூ கற்று வரும் இளைஞன் லீஇ தனது குருவுக்கு உதவி செய்வதற்காக குங்பூ பயிற்சிக்கு ஆட்களை தேடி அலைகிறான். இதில் ஏற்படும் சண்டையின் போது கமிஷனரின் மகள் சக்தி, லீயை பொலிசில் பிடித்துக் கொடுக்கிறாள்.

பொலிஸ் நிலையத்திலிருந்து வெளியே வரும் லீஇ தன்னை பிடித்துக் கொடுத்த சக்தியை பழிவாங்குவதற்காக அவளது வீட்டுக்குச் செல்கிறான். அவளைப் பார்த்த பிறகு மனம் மாறி அவள் மீது காதல் வயப்படுகிறான். ஒருநாள் சக்தியை பார்ப்பதற்காக இரவில் முகமூடி அணிந்து அவளுடைய வீட்டுக்குச் செல்கிறான்.

திரும்பும் வழியில் எதிர்பாராதவிதமாக திருடன் ஒருவனை பொலிசாரிடம் பிடித்துக் கொடுக்கிறான். இதனால் முகமூடி மனிதன் மீது மக்களுக்கு ஒரு தனி மரியாதை வருகிறது.

பின்னர் மற்றொரு நாள் முகமூடி அணியாமல் சக்தியின் வீட்டுக்குச் தனது காதலை சொல்ல லீ செல்கிறான். அப்போது கமிஷனரை கொலை செய்ய வரும் ஒருவன் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விடுகிறான்.

இதை பார்த்துவிடும் லீ அவனை பிடிக்க முயற்சியில் பொலிஸின் கண்ணுக்கு லீயே கொலைகாரன் போல தெரிய லீயை பிடிக்க பொலிசார் வரும்போது தப்பித்து ஓடி தலைமறைவாகி விடுகிறான்.

தொடர்ந்து தன் மீது விழுந்த பழியை போக்குவதற்காகவும்இ கொள்ளைக் கும்பலை பிடிப்பதற்காகவும்இ தன் காதலை காதலிக்கு உணர்த்துவதற்காகவும் லீ என்ன செய்கிறான் என்பதே மீதிக்கதை.

கொள்ளையர்களின் அறிமுகம், சுப்பர் ஹீரோ அறிமுகம் என அசத்தலாக நகர்கிறது முதல் பாதி. இதே அசத்தலை இரண்டாம் பாதியில் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே.

கொள்ளையர்கள் யார் என்பதை ஜீவாவும்இ ஜீவா யார் என்பதை வில்லனும் இலகுவில் தெரிந்து கொள்வதால் முதல் பாதியில் பரபரப்பாக நகர்ந்த திரைக்கதைஇ இரண்டாம் பாதியில் தத்தளிக்கிறது.

படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்ஜீவா. இப்படத்திற்கென ரொம்பவே உழைத்திருக்கிறார். குங்பூ மாணவன் என்பதை ஜீவா தனது அறிமுக காட்சியிலேயே நிரூபித்து விடுவதிலேயே அவரது உழைப்பு தெரிகிறது.

வெட்டியாக ஊர் சுற்றும் இளைஞனாகவும் சரி சுப்பர் ஹீரோவாகவும் சரி ஜீவா கனகச்சிதமாக பொருந்துகின்றார்.

புதுமுகம் பூஜா ஹெக்டேவுக்கு அழகான தோற்றத்தில் பளிச்சிடுகிறார். நாசர் வழக்கம் போல பாத்திரமாகவே மாறி அசத்துகிறார்.

நரேனின் தோற்றம் வில்லன் கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியிருக்கிறது. முதன் முதலாக வில்லன் வேடம் ஏற்றிருக்கும் நரேன் அதற்கு பொருத்தமானவர் என்பதை காட்சிக்கு காட்சி மெய்ப்பித்திருக்கிறார்.

கே இசையில் 'வாயை மூடி சும்மா இருடா...' பாடல் இந்த ஆண்டு அதிகப் பேர் முனுமுனுத்த பாடலாக இருக்கும். பார் ஆன்தமும் பட்டையை கிளப்ப போகும் பாடலாக அமைந்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சத்யாவின் உழைப்பு அருமை. ஒவ்வொரு காட்சியும் உயிருடன் படமாக்கியிருக்கிறார்.

பட்ஜெட்டினை தாண்டிய பிரம்மாண்டமான காட்சிகளை மிஷ்கின் காட்டியிப்பது பாராட்டுக்குரியது. மேலும் முந்தைய படங்களை விட வேகமெடுக்கும் காட்சிகளை வைத்து ரசிகளின் பொறுமை சோதிக்காமல் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார். இருந்தாலும் மிஷ்கினோட டச் வந்து போனாலும் கதை முழுவதும் இல்லாமல் போனது வருத்தம்.

என்னதான் சுப்பர் ஹீரோ படமாக இருந்தாலும் யதார்த்தமான காட்சிகளைக் கொண்டு கதையை நகர்த்தியிருப்பது மிஷ்கினின் சாமர்த்தியம். சில இடங்களில் ஜீவா போட்டுகொண்டிருந்த முகமூடியை அவர் போட்டுகொண்டது போல இருக்கிறது.

ஆக மொத்தத்தில் படம் எதிர்பார்ப்பினை மிஞ்சவில்லை என்றாலும் எதிர்பார்ப்பினை சிதறடிக்கவில்லை.

Share
Interesting
  மதுபோதையில் வந்த மணமகனுக்குப் பாடம் புகட்டிய மணமகள் 2013-06-13 11:04:02
  இரத்தம் குடிக்கும் அதிசயப் பெண் 2013-06-11 13:46:41
  யானையும் மசாஜ் செய்யும் 2013-05-20 11:23:09
  இயற்கையின் அதிசயம் 2013-05-02 14:22:57

 

Cinema
  வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! 2013-06-18 15:14:46
  தொடரும் பணமோசடி! சர்ச்சையில் பிரபு சாலமன்! 2013-06-17 10:06:35
  போட்டியில் கலை இயக்குநர்கள் 2013-06-14 11:23:32
  அஜித் வழியில் விஜய்சேதுபதி! 2013-06-13 10:09:03
Feature
  85 வருடங்கள் பழைமையான ஆலயத்துக்கு நேர்ந்த கதி 2013-06-15 10:41:01
  காற்றில் கரைந்த கண்ணீரின் வரிகள் 2013-06-12 13:58:09
  மூன்று பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொண்டாரா? தீ வைத்து கொல்லப்பட்டாரா? 2013-06-10 12:37:05
  ஓடிச்செல்லும் குற்றங்களை மெதுவாய் சென்று பிடிக்கும் சட்டங்கள் 2013-06-05 13:08:15
SITES
Virakesari
-------------------
Yarlmann
-------------------
Kalaikesari
-------------------
Sooriyakanthi
-------------------
Thirumanam
-------------------
CONTACT
Rate Card
--------------------
About Us
--------------------
Contact Us
--------------------
Suggestion
--------------------
Advertise
--------------------
© 2013 Copyright Express Newspapers (Cey) (Pvt) Ltd. All rights reserved | Powered by Virakesari Online