நுவரெலியாவில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனை சுற்றிவளைப்பு

Published By: Vishnu

08 Feb, 2021 | 10:39 AM
image

நுவரெலியா மாவட்டத்திலுள்ள நானுஓயா, எடின்புரோ தோட்டத்திற்கு மேற்பகுதியில் உள்ள அரசாங்க வனப்பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட சேனையொன்றை நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நேற்று மாலை சுற்றி வளைத்துள்ளனர்.

குறித்த கஞ்சா சேனையில் 3 மற்றும் 5 அடி உயரமான 272 கஞ்சா செடிகள் இருந்ததாகவும், சுற்றிவளைப்பின் போது கஞ்சா செய்கையில் ஈடுபட்ட நபர் தப்பியோடிவிட்டார் எனவும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்காக 3 செடிகளை மட்டும் வைத்துக்கொண்டு ஏனைய கஞ்சா செடிகளை தீயிட்டு அழிப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் நடவடிக்கை எடுத்தனர்.

அத்துடன், இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையையும் விசேட அதிரடிப்படையினர் ஆரம்பித்துள்ளனர்.

இதற்கு முன்னரும் நுவரெலியாவில் கஞ்சாவுடன் நபர்கள் கைதாகியிருந்தாலும், வனப்பகுதியில் பாரியளவில் கஞ்சா செய்கை செய்யப்பட்ட தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50