ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை நிறுத்தியது தென்னாபிரிக்கா

Published By: Vishnu

08 Feb, 2021 | 12:14 PM
image

முன்னணி சுகாதார ஊழியர்களுக்கான ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஒரு சிறிய மருத்துவ பரிசோதனையில், நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் வைரஸின் மிகவும் தொற்று மாறுபாட்டால் ஏற்படும் லேசான மற்றும் மிதமான நோயைத் தடுப்பதில் இது பயனுள்ளதாக இல்லை என்று அந்நாட்டு சகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந் நிலையில் அடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிவியல் ஆலோசனைகளுக்காக அரசாங்கம் காத்திருப்பதாக தென்னாபிரிக்க சுகாதார அமைச்சர் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஆரம்ப தகவல்கள் அடிப்படையில் ஒக்ஸ்போர்lட் - அஸ்ட்ராஜெனெகா கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டு அளவுகள் தென்னாபிரிக்காவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட மாறுபாட்டிலிருந்து லேசான மற்றும் மிதமான கொவிட்-19 க்கு எதிராக "குறைந்தபட்ச பாதுகாப்பை" மட்டுமே வழங்கியுள்ளன.

சராசரியாக 31 வயதுடைய சுமார் 2,000 தன்னார்வலர்கள் ஆகியோரிடையே இந்த தடுப்பூசி ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பாதி பேர் தடுப்பூசி பெற்றனர், பாதி பேர் மருந்துப்போலிகளை பெற்றனர்.

தென்னாபிரிக்கா கடந்த வாரம் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின்  1 மில்லியன் டோஸைப் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52