சம்பள நிர்ணயசபை நாளை கூடவுள்ளது..!

Published By: J.G.Stephan

07 Feb, 2021 | 03:12 PM
image

(எம்.மனோசித்ரா)
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபாய் அடிப்படை சம்பளம் குறித்து தீர்மானிப்பதற்காக நாளை திங்கட்கிழமை சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது. கொழும்பிலுள்ள தொழில் அமைச்சில் நாளை மதியம் 2 மணியளவில் தொழில் ஆணையாளர் தலைமையில் சம்பள நிர்ணயசபை கூடவுள்ளது.

இதில் தொழில் வழங்குனர்களான கம்பனிகளின் 8 உறுப்பினர்கள், தொழில் பெறுனர்களான மக்கள் சார்பில் தொழிற்சங்க உறுப்பினர்கள் 8 பேர் மற்றும் அரசாங்கத்தின் மூன்று உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முறையும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் கம்பனிகள் வழமையைப் போன்று இணக்கம் தெரிவிக்காத நிலையில் சம்பள நிர்ணயசபையினூடாக அதற்கான தீர்வைப் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கூட்டு ஒப்பந்தத்திற்கு அப்பால் சம்பள நிர்ணயசபையூடாக 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு பெற்றுக் கொடுக்கப்படுமானால் அதனை தாம் வரவேற்பதாகவும், எனினும் அந்த சம்பள அதிகரிப்பு நிபந்தனைகளற்றதாகக் காணப்பட வேண்டும் எனவும் சில தொழிற்சங்கள் தமது நிலைப்பாடுகளை தெரிவித்துள்ளன. எவ்வாறிருப்பினும் 1000 ரூபாய் கோரிக்கைக்கு சம்பள நிர்ணயசபையில் கம்பனிகள் இணக்கம் தெரிவிக்காவிட்டால், வாக்கெடுப்பின் மூலம் அதனை நிறைவேற்றிக் கொள்ளமுடியும் என சில தொழிற்சங்கங்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21