கடந்த 07 ஆம் திகதி ஊரகஸ்மன்ஹந்திய பகுதியைச் சேர்ந்த 29 வயதான  இளைஞர் ஒருவரை  பண்டாரகம பகுதியில் வைத்து கடத்தி 85 இலட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளனர்.

இந்நிலையில் கடத்திய இளைஞரை தங்காலை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளதுடன், சுந்தேக நபர்கள் ஐவரையும் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள்  28 - 49 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபர்கள் இன்று தங்காலை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.