அரசியல் நாடகங்களை அரங்கேற்றி நான் ஜனாதிபதியாகவில்லை - ஜனாதிபதி கோத்தாபய

07 Feb, 2021 | 07:25 AM
image

(எம்.மனோசித்ரா)

ஜனாதிபதியான நான் கிராமங்களுக்கு செல்ல வேண்டிய தேவை கிடையாது என்றும் இது அரசியல் நாடகம் என்றும் என்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அரசியல் நாடகங்களை அரங்கேற்றியோ அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்தோ நான் ஜனாதிபதியாகவில்லை என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை தெரணியகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் இதனைக் கூறிய அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி நேரடியாக கிராமங்களுக்குச் செல்ல வேண்டிய தேவை கிடையாது. இது அரசியல் நாடகமாகும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 

அரசியல் நாடகங்கள் அரங்கேற்றப்படுவது தேர்தல் காலங்களிலாகும். அதற்கு இன்னும் 4 ஆண்டுகள் உள்ளன.

ஏன் ஜனாதிபதி கிராமங்களுக்குச் செல்கின்றார் ? அதற்கு அதிகாரிகள் இருக்கிறார்கள் அல்லவா என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவுகளை செய்திருக்கிறார்கள். அதிகாரிகள் ஊடாக மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் முறைமையும் உள்ளது. ஆனால் நேரடியாக மக்களை சென்று சந்திப்பதே நான் பின்பற்றும் முறைமையாகும்.

கிராமப்புறங்களிலுள்ள அப்பாவி மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக் கொடுப்பதை தவறான புரிந்து கொள்ளவோ அல்லது திரிபுபடுத்தவோ கூடாது. 

மனிதாபிமானத்தை மக்களுக்கான வேலைத்திட்டங்களுக்காக பயன்படுத்த வேண்டும். அரசியல் நாடகங்களை அரங்கேற்றி அல்லது ஊடகங்களில் பிரசாரங்களை முன்னெடுத்து நான் ஜனாதிபதியாகவில்லை. வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக மக்கள் மத்தியில் செல்ல முடியும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51