அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் தோமஸ் சானொன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார்.

அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தெற்கு, மத்திய ஆசிய பிராந்தியத்துக்கான பிரதி உதவிச் செயலாளர் மான்பிரீத் சிங் ஆனந்தும் வரவுள்ளார் என திணைக்களம் அறிவித்துள்ளது.