சுவர்ணமஹால் வைப்புகளின் எஞ்சியுள்ள தொகை குறித்த மத்திய வங்கியின் தீர்மானம்

Published By: J.G.Stephan

06 Feb, 2021 | 03:07 PM
image

சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீத தொகையை வாடிக்கையாளர்களுக்கு மீள்கொடுப்பனவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.



இவ்விடயம் தொடர்பில் மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின் ஊடாக இதுபற்றி ஏற்கனவே கூறப்பட்டிருந்தவாறு,  நாணயச் சபையினால் நியமிக்கப்பட்ட முகாமைத்துவக் குழாத்தின் மேற்பார்வையின் கீழ் கம்பனியின் எஞ்சியுள்ள வைப்புக்களின் 50 சதவீதம் வரையான மீள்கொடுப்பனவு நோக்கத்திற்காக மாத்திரம் நிபந்தனையுடனான அடிப்படையொன்றில் மட்டுப்படுத்தப்பட்ட காலமொன்றிற்கு சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வியாபாரத்தினை மீள ஆரம்பிப்பதற்கான கட்டளை வழங்கப்பட்டது.

 அதன்படி  சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சி அத்தகைய திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை எடுத்துள்ளது. அதற்கமைய, ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட 30 சதவீத மீள்கொடுப்பனவு மற்றும் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் தகைமையுடைய நட்டஈடு என்பவற்றைக் கழித்ததன் பின்னர் சுவர்ணமஹால் பினான்சியல் சேர்விஸஸ் பிஎல்சியின் வைப்புகளின் எஞ்சியுள்ள பெறுமதியின் 50 சதவீதம் இம்மாதம் 3ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து மீள்கொடுப்பனவு செய்யப்படும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02