நாட்டில் சில இணையதளங்கள் மீது சைபர் தாக்குதல்: விசாரணை ஆரம்பம்

Published By: J.G.Stephan

06 Feb, 2021 | 02:09 PM
image

நாட்டில் பயன்பாட்டிலுள்ள சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இணையதள முகவரியில் இறுதியில்.lk என முடிவடையும் சில இணையத்தளங்களே இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக  தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.



இவ்வாறு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ள இணையத்தளங்களை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக குறித்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓசத சேனாநாயக்க தெரிவிக்கின்றார்.

அத்தோடு மேலதிக விபரங்களை அறிய 011 4216061 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளிநபர்களாலேயே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவந்துள்ளது.

இந்த சைபர் தாக்குதல் காரணமாக .lk இணையத்தளத்தின் சேவர்கள் (Server) எவற்றுக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பதுவும் குறிப்பிடதக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்