காஷ்மீரில் இடம்பெறும் மனித உரிமை மீறலுக்கு எதிராக ஐ. நா. சபை குரல் கொடுக்க வேண்டும் - பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர்

06 Feb, 2021 | 12:22 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

காஷ்மீரில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை உட்பட முழு உலக நாடுகளும் குரல் கொடுக்கவேண்டும் என பாகிஸ்தான் பதில் உயர் ஸ்தானிகர் தன்விர் அஹ்மத் தெரிவித்தார்.

ஒற்றுமையை வெளிப்படுத்தவும் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தில் காஷ்மீர் மக்களுக்கு பாகிஸ்தானின்  ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தவும் காஷ்மீர் நட்புறவு தினம் கொழும்பில் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் மக்கள்  காஷ்மீர் தொடர்பில் மிகவும் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.

பாகிஸ்தான் எப்போதும் தங்கள் காஷ்மீர் சகோதர சகோதரிகளுடன்  தோளோடு தோள் நிற்பார்கள். இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பான  ஜம்மு காஷ்மீர் ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்திய துருப்புக்களின் கொடூரமான வன்முறைக்கு உட்பட்டுள்ளது.அத்துடன் காஷ்மீர் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் பாகிஸ்தான் உறுதியாக இருக்கின்றது. அதற்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகின்றது.

பல நூறுவருடங்களாக எதிர்கொண்டுவரும் மனித உரிமை மீறல்களை அனுமதிக்க முடியாது. இதற்காக அனைத்து நாடுகளும் குரல் கொடுக்கவேண்டும்.அத்துடன் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்திய ஊடகங்கள் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

அதுதொடர்பாக அவதானம் செலுத்தப்படவேண்டும். அந்த மக்களின் உரிமைக்காக ஐக்கிய நாடுகள் சபையில் பிரேரணை கொண்டுவந்து நிறைவேற்றப்படவேண்டும். அதேபாேன்று அந்த மக்களின் உரிமைக்காக ஐக்கிய நாடுகள் சபை உட்பட முழு உலக நாடுகளும் குரல் எழுப்பவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04