எரிப்பொருட்களின் விலை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்குவரும் வகையில் குறைக்கப்படவுள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அறிவித்துள்ளது.

எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 பெற்றோலின் விலை மற்றும் எக்ஸ்ரா மைல் டீசலின் விலை என்பன இன்று நள்ளிரவு முதல் 2 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எக்ஸ்ரா பிரிமியம் யூரோ 3 பெற்றோலின் விலை 121 ரூபாவாகவும் எக்ஸ்ரா மயில் டீசல் 97 ரூபாவாகவும் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உலக சந்தையில் எரிப்பொருளின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற் கொண்டு தாம் இந்த விலை குறைப்பை செய்துள்ளதாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.