கொழும்பு, பொகவந்தலாவை பகுதிகளில் கொரோனா மரணம் பதிவு ; தொற்றாளர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்தை கடந்தது

05 Feb, 2021 | 10:06 PM
image

கொரோனாவால்  கொழும்பு -3, பொகவந்தலாவை, நாவல, மட்டக்குளி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 4 பேர் பலி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இலங்கையில் இதுவரை 343 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 67 000 ஐ கடந்துள்ளது.

இன்று  வெள்ளிக்கிழமை இரவு 9 மணி வரை 729 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கயைம மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 67 844 ஆக உயர்வடைந்துள்ளது. 

இவர்களில் 61 461 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு 5651 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, இந்தியாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 5 இலட்சம் கொவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகளில்,  ஒரு இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் இலங்கையர்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று வியாழன் பதிவான மரணங்கள்

நேற்று வியாழக்கிழமை 7 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்வடைந்துள்ளது.

மக்கொன பிரதேசத்தை சேர்ந்த 58 வயதுடைய ஆணொருவர் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவுடன் மோசமடைந்த சிறுநீரக நோய் இவரது மரணத்திற்கான காரணமாகும்.

லேவுட பிரதேசத்தை சேர்ந்த 82 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா , இதய நோய் என்பன இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஆணொருவர் தெல்தெனிய ஆதார வைத்தியசாலையில் 3 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இவரது உயிரிழப்பிற்கான காரணம் கொவிட் நிமோனியா, சிறுநீரக நோய் மற்றும் இதய நோய் மரணத்திற்கான காரணமாகும்.

ஹெட்டிபொல பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம வைத்தியசாலையில் நேற்று முன்திகம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா நிலைமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

பியகம பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா இவரது மரணத்திற்காக காரணமாகும்.

திக்வெல்ல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய பெண்ணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 1 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றால் இதயம் செழிலந்தமை, உயர் இரத்த அழுத்தம் என்பவை மரணத்திற்கான காரணமாகும்.

நுவரெலியாவில் 62 வயதுடைய ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொவிட் நிமோனியா நிலைமை மரணத்திற்கான காரணமாகும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01