தமிழர்களும் முஸ்லிம்களும் இணைந்து பேரினவாதத்தை எதிர்க்கலாம்: சுமந்திரன் எம்.பி.

Published By: Digital Desk 3

05 Feb, 2021 | 09:52 AM
image

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்று சேர்ந்து நின்றால் மாத்திரம்தான் பேரினவாதத்துக்கு எதிராக முகங்கொடுக்க முடியுமென பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

நாட்டில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக இடம்பெறும் அடக்குமுறைகளை எதிர்த்து, இரண்டாவது நாளாகவும் நேற்று (04.02.2021) நடைபெற்ற பேரணியில், ஓட்டமாவடியில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

“முஸ்லிம் மக்களுக்கு தற்போது ஏற்பட்டிருக்கின்ற பிரதான பிரச்சினை ஜனாஸா எரிப்பு விவகாரம். முஸ்லிம்களுடன் இணைந்து அதற்கு  நாம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறோம். அதேபோல, தமிழ் மக்களுக்கு காலாகாலமாக நீண்ட பிரச்சினைகள் இருக்கின்றன.

“ அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும், காணமால் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி செய்யப்பட்ட வேண்டும், எங்கள் நில அபகரிப்புகள் நிறுத்தப்பட வேண்டும், வழிபாட்டுத் தளங்கள் உடைக்கப்படுகின்றமை நிறுத்தப்பட வேண்டும். 

“அதேபோன்று, மலையகத் தமிழ் மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பள உயர்வென்று சொல்லிச் சொல்லி எத்தனையோ காலமாக இழுத்தடிக்கின்றார்கள்.  இப்படியாக பல பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு எதிராக இந்த நாட்டில் இடம்பெறுகிறது.

“எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த பேரினவாதத்துக்கு எதிராக முஸ்லிம்களும் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து திரண்டு நின்றால் மாத்திரம்தான் முகங்கொடுக்க முடியும்.

“இதுவரை காலமும் தனித்தனியாக எங்களைக் கையாண்டார்கள். இனிமேல் எங்களை தனித்தனியாக பிரித்து ஆள முடியாது என்ற செய்தியை இந்தப் போராட்டத்தின் மூலம் நாங்கள் சொல்லுகின்றோம். இந்த ஒற்றுமையை தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும். தமிழ் பேசுகின்ற மக்கள் என்கின்ற வகையில் நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும்” என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11