தம்பியை இரா­ணு­வமே கைது செய்­தது :  ஈ.பி.­டி.­பி.க்கும் தொடர்பு; சகோ­தரி சாட்­சியம் 

Published By: MD.Lucias

14 Dec, 2015 | 09:32 AM
image

 

எனது தம்பி தனியார் கல்­வி­நி­லையம் ஒன்றை நடத்­தி­வந்­த­தோடு பிர­தேச ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டு­வந்தார். அவரை இரா­ணு­வமே கைது செய்­தது. இரா­ணுவ முகா­மி­லி­ருந்து தொலை­பேசி வழி­யாக என்­னுடன் உரை­யா­டினார். என சாட்­சி­ய­ம­ளித்த சகோ­தரி ஈழ­மக்கள் ஜன­நா­யகக் கட்­சி­யி­ன­ருக்கும் இந்த சம்­ப­வத்­துடன் தொடர்பு உள்­ள­தாக சந்­தேகம் வெளி­யிட்டார்.

காணா­மல்­போனோர் தொடர்­பான ஜனா­தி­பதி ஆணைக்­குழு பருத்­தித்­துறை பிர­தேச செய­ல­கத்தில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை நடத்­திய அமர்வின் போது துன்­னாலை கிழக்கு

கர­வெட்­டியைச் சேர்ந்த ஜெய­ரட்ணம் கம­லா­சினி என்­பவர் சாட்­சியம் அளிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தனது சாட்­சி­யத்தில் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

எனது தம்பி சும்­பி­ர­ம­ணியம் ராமச்­சந்­திரன் நெல்­லி­ய­டியில் தனியார் கல்வி நிலையம் ஒன்றை நடத்தி வந்தார். அத்­தோடு அவர் பிர­தேச ஊட­க­வி­ய­லா­ள­ரா­கவும் செயற்­பட்­டு­வந்தார். 2007ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 17ஆம் திகதி வழ­மை­போன்று தனியார் கல்­வி­நி­லை­யத்தை மூடி­விட்டு வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்­த­வேளை கலிகைச் ­சந்­தியில் வைத்து இரா­ணு­வத்­தினர் இடை­ம­றித்து அங்­கி­ருந்த முகா­மிற்கு அழைத்துச் சென்­றுள்­ளனர். இதனை துன்­னாலையைச் சேர்ந்த கமல் என்­பவர் எம்­மி­டத்தில் தெரி­வித்தார். தன்­னுடன் ­வந்­த­போதே இந்தச் சம்­பவம் நிகழ்ந்­த­தா­கவும் இரா­ணுவ முகாமில் சென்று கோரும்­ப­டியும் கூறினார்.

அத­னை­ய­டுத்து நாம் மறுநாள் அந்த முகா­மிற்குச் சென்றோம். எனது தம்­பியின் பெயரைக் கூறி அவர்­க­ளி­டத்தில் கேட்டோம். அப்­போது தமக்கு அவரை யாரென்று தெரி­யாது என்றும் அவ்­வா­றான ஒரு­வரை கைது செய்­ய­வில்லை என்றும் கூறினர். இவ்­வாறு கூறி­ய­தை­ய­டுத்து நாம் பல்­வேறு இடங்­களில் தேடு­தல்­களை மேற்­கொண்­டி­ருந்­த­கா­லங்­களில் பருத்­தித்­து­றை­மு­காமைச் சேர்ந்த இரா­ணு­வத்­தினர் நால்வர் டிரக் வண்டி ஒன்றில் எமது வீட்­டிற்கு வரு­கை­தந்து எனது தம்­பியின் பிறப்­பத்­தாட்சி பத்­திரம் மற்றும் அவ­ரு­டைய கல்விச் சான்­றி­தழ்கள் உள்­ளிட்ட ஆவ­ணங்கள் அனைத்­தையும் எடுத்துச் சென்­றனர்.

2013ஆம் ஆண்டு எமது வீட்­டுக்கு அரு­கி­லுள்ள கிராம சேவகர் கூட்டம் ஒன்­றுக்­காக பல்­லப்பை ஆனை­வி­ழுந்தான் பகு­தி­யி­லுள்ள இரா­ணுவ முகா­மிற்குச் சென்­ற­போது எனது தம்­பியை அங்கு கண்­ட­தாக ஒருவர் தன்­னிடம் தெரி­வித்த­தாக எங்­க­ளி­டத்தில் கூறினார். சிறிது காலம் கழித்து தானே எனது தம்­பியை நேரில் கண்­ட­தா­கவும் அச்­சத்தின் கார­ண­மாக அதனை உடன் கூற­வில்லை எனவும் குறிப்­பிட்டார்.

எனினும் நாம் அச்சத்தின் காரணமாக அந்த இராணுவ முகாமுக்குச் செல்லவில்லை. ஆனால் மனித உரிமை ஆணைக்குழு இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பொது அமைப்புகளிடத்தில் முறைப்

பாடுகளை பதிவுசெய்தோம். தற்போதுவரை எனது தம்பியை தேடிக்கொண்டி இருக் கின்றேன். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51