சம்பள பணிபகிஷ்கரிப்பிற்கு நுவரெலியா மாவட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்பு: வேலு யோகராஜா

Published By: J.G.Stephan

04 Feb, 2021 | 02:16 PM
image

பெருந்தோட்ட தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபாய் சம்பள உயர்வு தொடர்பாக நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைக்கு ஒரு அழுத்தம் கொடுப்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நாளை (05.02.2021) ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த பணிபகிஷ்கரிப்புக்கு அனைத்து தோட்ட தொழிலாளர்களும் மலையகத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள நகர வர்த்தகர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள், ஆசிரிய தொழிற்சங்கங்கள், இளைஞர்கள், நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் உட்பட பொதுமக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார்கள் என நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் இன்று (04.02.2021) நடைபெற்ற ஊடக மாநாட்டில் நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவித்ததாவது,

மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான், பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சித்த பொழுதும் கடந்த பேச்சுவார்த்தையின் போது 200 ரூபாய் சம்பள உயர்வு மட்டுமே பெற முடிந்தது.

இன்று இ.தொ.கா வின் பொது செயலாளரும், இராஜாங்க  அமைச்சருமான  ஜீவன் தொண்டமான் இந்த 1000 ரூபாய் சம்பள உயர்வை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றார்.

அதன் ஆரம்பகட்டமாக முதலாளிமார் சம்மேளனத்திற்கும், சம்பள நிர்ணய சபைக்கும், அரசாங்கத்திற்கும் ஒரு அழுத்தம் கொடுக்கும் முன்னோடி ஏற்பாடாக நாளை (05.02.2021) அமைதியான ஒரு நாள் பணிபகிஷ்கரிப்பை நடத்த ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு எவ்வித பேதமும் இன்றி அனைவரும் ஒண்றிணைந்து ஒற்றுமையாக கைகோர்க்க வேண்டும் என இதன்போது வேலு யோகராஜா கேட்டுக் கொண்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55