மலையகத்தில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்த போராட்டம்

Published By: Digital Desk 3

03 Feb, 2021 | 07:24 PM
image

(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,000 ரூபாய் அடிப்படை சம்பள அதிகரிப்பு தொடர்பான பேச்சுவார்த்தை  சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் , கம்பனிகளுக்கு அழுத்தம் பியோகிக்கும் வகையில் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை பெருந்தோட்ட தொழிலாளர்களால் வேலை நிறுத்த போராட்டம் இடம்பெறவுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கரஸ் ஏற்பாடு செய்துள்ள இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் தொழிற்சங்களில் ஒன்றான பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.

கூட்டு ஒப்பந்த்தில் கையெழுத்திடும் பிரிதொரு தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாகவோ அல்லது அதனை புறக்கணிப்பதாகவோ கூறவில்லை என்றும் , மக்கள் விரும்புவார்களாயின் அதில் கலந்து கொள்வதில் எவ்வித சிக்கலுமில்லை என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அடிப்படை சம்பளம் 725 ரூபாவாகவும் ஏனைய கொடுப்பனவுகளுடன் 1,108 ரூபா நாளாந்த சம்பளம் வழங்குவதாகவும் குறிப்பிட்டு முதலாளிமார் சம்மேளனம் செவ்வாயன்று அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22