கூகுள் நிறுவனத்தின் நிதித்துறை முகாமையாளராக பணிபுரிந்துவந்த இளம்பெண் அமெரிக்காவின் காட்டுப்பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள கூகுள் நிறுவனத்தில் நிதித்துறை முகாமையாளராக பணியாற்றி வந்த வனேசா மார்கோட்டி(27) மாசாச்சூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பிரின்ஸ்டன் புறநகர் பகுதியில் வசித்து வந்த தனது தாயாரை சந்திக்க சென்றிந்த வேளையில், அங்குள்ள காட்டுப்பகுதியில் நடைபயிற்சி செய்யச் சென்றுள்ளார். 

மாலை வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.மகளின் கையடக்கத்தொலைபேசிற்கு தொடர்பு கொண்டு பார்த்தபோது, எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தால் வனேசாவின் தாயார் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து, பொலிஸார் மார்கோட்டினை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அவளது வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவில் மரக்கட்டைகளுக்கு இடையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, எரிக்கப்பட்ட நிலையில் ஒரு சடலம் கிடைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அது வனேசாவின் உடல் என்பது கண்டறியப்பட்டது. பலாத்காரம் செய்யப்பட்ட மார்கோட் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இதில் அவரது தலை, கால் ஆகிய பாகங்கள் மட்டும் எரிந்துள்ளன என பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.