தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முன்வைக்கும் அனைத்துக் கோரிக்கைகளையும் செயற்படுத்த முடியாது - திலும் அமுனுகம

Published By: Gayathri

03 Feb, 2021 | 12:53 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டால் அதனை எதிர்கொள்ள முடியும். முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளையும் செயற்படுத்த முடியாது. கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக தனியார் பேருந்து உரிமையாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

போக்குவரத்து அமைச்சில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கொண்டு தனியார் பேருந்து சங்கத்தினர் ஆரம்பத்தில் இருந்து பல கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்கள். முன்வைக்கப்படும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியாது. தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் பணிப்புறக்கணிப்பு போராடட்டத்தில் ஈடுபட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். 

அரச பேருந்துகள் மேலதிகமான போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும். கொழும்பு நகருக்குள் அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் கடந்த காலங்களில் முன்வைத்த கோரிக்கைககளில் இயலுமானவற்றை நிறைவேற்றியுள்ளோம்.

அதற்கு மேலதிகமாக நிவாரணங்களும் போக்குவரத்து சபை ஊடாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து நிவாரணங்களையும் பெற்றுக் கொண்டு ஏதும் கிடைக்கவில்லை என்று குறிப்பிடுவது தவறான செயற்பாடாகும்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் மாத்திரமல்ல நாட்டில் உள்ள அனைத்து சேவைத்துறைகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன.

ஆகவே இயலுமான சலுகைகளை மாத்திரம் வழங்குவோம். போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பேருந்துகளின் தரம் தொடர்பில் ஆராய விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் முன்வைத்த கோரிக்கைகள் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

பேச்சுவார்த்தை ஊடாக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும். அதனை விடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டால் அரசாங்கத்துக்கும், பொது போக்குவரத்து சேவையில் ஈடுப்படும் பயணிகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

சீன நாட்டு தயாரிப்புக்களிலான புகையிரத பெட்டிகளை புகையிரத போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கு புகையிரத சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். இவ்விடயம் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31