கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் சாதனை படைத்த கேப்டன் டாம் மூர் காலமானார்.

Published By: Vishnu

03 Feb, 2021 | 09:05 AM
image

கொரோனா வைரஸுடன் போராடும் சுகாதார சேவை ஊழியர்களுக்காக மில்லியன் கணக்கான பவுண்ட்களை திரட்டுவதன் மூலம் தனது நிலையை மேலும் உயர்த்திய இரண்டாம் உலகப் போர் வீரரான பிரிட்டனின் கேப்டன் டாம் மூர் காலமானார்.

கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே டாம் மூர் தனது 100 ஆவது வயதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

தேசிய சுகாதார சேவைக்காக 38.9 மில்லியன் பவுண்ட்கள் (53 மில்லியன் அமெரிக்க டொலர்) திரட்ட வீட்டில் இருக்கும் 25 மீட்டர் நீள தோட்டத்தில் 100 தடவை நடந்து, நன்கொடையாக திரட்டினார்.

"எங்கள் அன்பான தந்தை கேப்டன் டாம் மூரின் மரணத்தை நாங்கள் அறிவிப்பது மிகுந்த சோகத்துடன் உள்ளது" என்று அவரது மகள்கள் செவ்வாய்க்கிழமை காலை மத்திய இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட் மருத்துவமனையில் இறந்ததைத் தொடர்ந்து ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில், அவர் புரோஸ்டேட் மற்றும் தோல் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

அவர் நிமோனியாவை எதிர்த்துப் போராடினார், ஜனவரி 22 ஆம் திகதி கொவிட் -19 க்கு நேர்மறை பரிசோதனை செய்த பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அவர் எடுத்துக்கொண்ட ஏனைய மருந்துகள் காரணமாக அவருக்கு தடுப்பூசி செலுத்த முடியாது போனதாகவும் குடும்பத்தார் மேலும் கூறினார்.

இந் நிலையில் உயிரிழந்த டாம் மூருக்கு பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது இரங்கல் செய்தியில், டாம் மூர் ஒரு ஹீரோ என்றும் உலகத்திற்கே நம்பிக்கையின் சின்னமாக விளங்கியவர் என்றும் தெரிவித்துள்ளார். 

இங்கிலாந்து ராணி எலிசபெத், அரச குடும்பத்தின் சார்பில் டாம் மூரின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். 

இவரது மறைவுக்கு அமெரிக்காவின் வெள்ளை மாளிகை சார்பில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25