இலங்கைக்கான கொரோனா தடுப்பூசிகள் இரு வாரத்தில் - சீனத் தூதரக பேச்சாளர்

Published By: Digital Desk 4

02 Feb, 2021 | 08:57 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன தடுப்பூசிகள் இரு வார காலத்திற்குள் இலங்கையை வந்தடையும் இலங்கை உள்ளிட்ட 52 நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட உள்ளதாக சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைவரும் பேச்சாளருமான லு ஷொங் தெரிவித்தார்.

இலங்கை உட்பட சுமார் 52 நாடுகளுக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் குறித்து சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வோங் வென்பின்  நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இது குறித்து வினாவிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உலக நாடுகளுக்கும் கொவிட் -19 தடுப்பூசியை வழங்கும் திட்டத்தை சீனா விரைவுப்படுத்தியுள்ளது.

குறிப்பாக அபவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு தேவையான தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்குவதில் கூடிய துரித நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதுடன் அந்த நாடுகளின் மக்கள் சுகாதாரத்திற்கு இந்த ஒத்துழைப்பு காலத்திற்கு ஏற்றதாகவே அமைகின்றது.

ஏற்கனவே பாக்கிஸ்தானுக்கு சீன தடுப்பூசிகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இது ஏனைய நாடுகளுக்கும் தடுப்பூசியை வழங்கும் முதலாவது கட்டமாக பதிவாகியது.

வெளிநாட்டு பங்காளிகளுடன் கூட்டு ஆராய்ச்சி மற்றும் தடுப்பூசிகளை தயாரிப்பதில் சீனா தனது நிறுவனங்களுக்கு ஆதரவளித்துள்ளதுடன் ஏற்கனவே ஐக்கிய அரபு அமீரகம் மொராக்கோ இந்தோனேசியா துருக்கி  பிரேசில் மற்றும் சிலி உள்ளிட்ட நாடுகளுக்கு சினோபார்ம் மற்றும் சினோவாக் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவசரமாக தேவைப்படும் நாடுகளுக்கு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதில் சீனாவும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஆதரவளித்ததுள்ளது.

தடுப்பூசிகளின் சமமான விநியோகம் மற்றும் பயன்பாட்டை ஊக்குவிப்பதில் சர்வதேச சமூகம் கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வளரும் நாடுகளில் தடுப்பூசிகள் கிடைக்கும் தன்மை மற்றும் மலிவு ஆகியவற்றை உறுதி செய்ய சீனா எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19