நாட்டின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக பதிவு

Published By: Vishnu

02 Feb, 2021 | 07:24 AM
image

நாட்டில் நேற்றைய தினம் 826  புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 64,983 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களுள் 816 நபர்கள் பேலியகொட - மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதனால் பேலியகொட - மினுவாங்கொட கொவிட் கொத்தணிப் பரவலுடன் சிக்கிய நபர்களின்  மொத்த எண்ணிக்கை 60,990 ஆக உயர்வடைந்துள்ளது.

ஏனைய 10 பேர் சிறைச்சாலை வெளிநாடுகளிலிருந்து வருகை தந்தவர்களும் ஆவர். 

இது இவ்வாறிருக்க கொரோனா தொற்றுக்குள்ளான 916 நோயாளர்கள் நேற்றைய தினம் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அதனால் குணமடைந்தவர்களின் மொத்த தொகையும் 58,075 ஆக பதிவாகியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,585 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன், கொரோனா தொற்று சந்தேகத்தில் 839 நபர்கள் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பிலும் உள்ளனர்.

இதேவேளை இலங்கையில் கொவிட் - 19 தொற்றினால் மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைவாக இலங்கையில் பதிவாகியுள்ள கொரோனா தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04