கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்ட 59 ஆயிரம் பேரில் எவருக்கும் பக்கவிளைவுகள் இல்லை - கொரோனா நிலைவரம் !

Published By: Digital Desk 4

01 Feb, 2021 | 08:45 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 64 505 ஆக அதிகரித்துள்ளது. இன்று திங்கட்கிழமை மாலை 7 மணி வரை 348 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.

நாட்டில் இது வரையில் இனங்காணப்பட்ட மொத்த தொற்றாளர்களில் 60 174 தொற்றாளர்கள் இரண்டாம் அலையுடன் தொடர்புடையவர்களாவர்.

58 075 தொற்றாளர்கள் இது வரையில் குணமடைந்துள்ளதோடு , 6114 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 65 ஆயிரத்தை அண்மித்தது : தடுப்பூசி ஏற்றப்பட்ட 59 ஆயிரம் பேரில் எவருக்கும் பக்கவிளைவு இல்லை.

நாடளாவிய ரீதியில் 79 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 11 399 சிகிச்சை படுக்கைகள் உள்ளன. அவற்றில் 8267 படுக்கைகள் பாவனையிலுள்ளன.

இதேவேளை நாடளாவிய ரீதியில் 146 அவசர சிகிச்சை பிரிவிற்கான படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதோடு அவற்றில் 24 படுக்கைகளில் மாத்திரமே தொற்றாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 13 392 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்தோடு நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 59 154 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. ஞாயிறன்று மாத்திரம் 21 329 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசியை ஏற்றிக் கொண்ட எவருக்கும் இதுவரையில் பாரதூரமான பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்று பதில் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

ஞாயிறன்று பதிவான மரணங்கள்

நேற்று ஞாயிற்றுக்கிழமை மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகின. அதற்கமைய நாட்டில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 316 ஆக உயர்வடைந்துள்ளது.

கொழும்பு 8 ஐ சேர்ந்த 38 வயதுடைய ஆணொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து வெலிசறை மார்பு சிகிச்சை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது அந்த வைத்தியசாலையில் ஜனவரி 31 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் நுரையீரல் தொற்று ஏற்பட்டமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

கடுவெல பிதேசத்தைச் சேர்ந்த 68 வயதுடைய பெண்ணொருவர் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையில் சிகிச்சை  பெற்று வந்த நிலையில் ஜனவரி 27 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இதயம் செயழிலந்தமை இவரது மரணத்திற்கான காரணமாகும்.

அங்குறுவாதொட்ட பிரதேசத்தை சேர்ந்த 69 வயதுடைய பெண்ணொருவர் ஹொரண ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு ஜனவரி 30 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று , உயர் இரத்த அழுத்தம் இவரது மரணத்திற்கான காரணமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02