இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்தார்.

கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாரின் நிதியொதுக்கீட்டில் வலது குறைந்த ஒருவருக்கு சைக்கிள் ஒன்று வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பில் உள்ள டெலோ இயக்க அலுவலகத்தில் தமிழீழ விடுதலை இயக்க(டெலோ) தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இதனை வழங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் கட்சியின் பிரதித்தலைவரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம், பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் உட்பட கட்சி முக்கிஸ்தர்களும் கலந்துகொண்டனர்.