மலையகத்தில் மாணவர்களின் வருகையில் வீழ்ச்சி

Published By: Gayathri

01 Feb, 2021 | 05:12 PM
image

மலையகத்தில் சுகாதார நடைமுறைகளுடன் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை மீண்டும் ஆரம்பமாகியிருந்தாலும் மாணவர்களின் வருகை என்பது இன்னும் முழுமையாக இல்லை என தரவுகள் தெரிவிக்கின்றன.

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சில தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் மாணவர்களின் வருகையானது 30 வீதத்துக்கும் குறைவாகவே இருப்பதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட பாடசாலை நிர்வாகத்தினர் சமுகமளிக்கின்ற போதிலும், மாணவர்களை பாடசாலைக்கு அனுப்புவதற்கு சில பெற்றோர் இன்னும் தயக்கம் காட்டும் நிலை நீடிக்கின்றது.

 சமூக இடைவெளியை பேணுவதற்காக ஒரு வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக கல்வி நடவடிக்கை இடம்பெறுகின்ற நிலையிலும், 100 சதவீத வருகை இன்னும் உறுதியாகவில்லை.

குறிப்பாக அட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட அட்டன் ஶ்ரீபாத சிங்கள பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் கல்வி பயிலும் நிலையில் இன்று (01.02.2021) ஆறு மாணவர்கள் மாத்திரமே வருகை தந்திருந்தனர் என பாடசாலை அதிபர் தெரிவித்தார்.

இப்பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவரொருவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. அதன்பின்னரே வருகை நன்றாகவே வீழ்ச்சியடைந்துள்ளது எனக் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55