சுதந்திர தின ஒத்திகையையிட்டு, பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள மாற்று வீதிகள் குறித்த அறிவிப்பு

Published By: J.G.Stephan

30 Jan, 2021 | 04:58 PM
image

(செ.தேன்மொழி)
சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று முதல் ஒத்திகைப் பார்க்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவதனால், சுதந்திர சதுக்கத்தின் முன்னால் அமைந்துள்ள வீதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அதனால் அவற்றுக்கு பதிலாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

இலங்கையின் 73 ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. சுதந்திர சதுக்கத்திற்கு முன்னால் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை முன்னிட்டு இன்று சனிக்கிழமை முதல் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதனால் அப்பகுதி வீதிகளில் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் , இதன்போது மக்கள் மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இன்று சனிக்கிழமை முதல் எதிர்வரும் புதன்கிழமை காலை வரை ஆறு மணிமுதல் பிற்பகல் ஒரு மணிவரை சுதந்திரதின ஒத்திகை நிகழ்வுகள் இடம்பெறும். வியாழக்கிழமை சுதந்திரதினம் என்பதால், அன்றைய தினம் அதிகாலை 4 மணிமுதல் பிற்பகல் 1 மணிவரை சுதந்திரதின கொண்டாட்டங்களை முன்னிட்டு சுதந்திர சதுக்கத்தின் முன்னால் காணப்படும் வீதி மூடப்பட்டிருக்கும்.  மாற்று வீதிகள் தொடர்பில் வீதி சமிஞ்சைகள் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதுடன்,பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பர்.

இதேவேளை , போக்குவரத்து நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்படும் பகுதிகளில் வசிப்பவர்கள் , தங்களது அடையாளங்களை உறுப்படுத்தியதன் பின்னர் தங்களது வசிப்பிடங்களை நோக்கிச் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.இதன்போது இந்த பகுதிகளுக்கு வரும் ஏனைய வாகனங்களுக்கு எந்தவொரு இடையூறும் ஏற்படுத்தப்பட மாட்டாது. அவை அனைத்துமே மாற்று வழிகள் ஊடாக அனுப்பி வைக்கப்படும். எனினும், கொழும்பு நகரத்தின் ஊடாக செல்லும் வாகனங்கள் சுதந்திர சதுக்கத்திற்கு முன்னால் உள்ள வீதியை பயன்படுத்தாமல் ஏனைய வீதிகளை பயன்படுத்துவது மேலும் சிறந்ததாகும்.

பொது போக்குவரத்து பேரூந்துகளுக்கான மாற்று வழிகள்  

138, 120, 122 மற்றும் 125 என்ற வீதி இலக்கங்களைக் கொண்ட பேரூந்துகள், சொய்சா சுற்று வட்டம், தர்மபால மாவத்தை , ஆனந்த குமாரசாமி மாவத்தை ,பூங்கா ஒழுங்கை ,ராஜகீய மாவத்தை மற்றும் ரீட் மாவத்தை ஊடாக செல்ல முடியும்.

154 இலக்க பேரூந்துகள் மற்றும் ரத்மலானையிலிருந்து  கிரிபத்கொட நோக்கிச் செல்லும் பேரூந்துகள், காலை 6 மணியிலிருந்து முற்பகல் 10 மணிவரை கல்லறை சுற்றுவட்டம் , புலர்ஸ் வீதி, தும்முல்ல ஊடான வீதியையும் , முற்பகல் 10 மணி தொடக்கம் 12 மணிவரை கல்லறை சுற்றுவட்டம் , மாவத்தை சந்தி , திம்பிரிகஸ்யாய வீதி , ஜாவத்த வீதி , பௌத்தாலோக்க மாவத்தை வீதியையும் பயன்படுத்த முடியும்.

ரத்மலானையிலிருந்து  கிரிபத்கொட நோக்கிச் செல்லும் பேரூந்துகள் முற்பகல் 10 மணி தொடக்கம் பிற்பகல் 12 மணிவரை தும்முல்ல சந்தி, தேர்ஷ்டன் வீதி, பூங்கா வீதி , பித்தல சந்தி மற்றும் தர்மபால மாவத்தை லிப்டன் சுற்றுவட்டம் ஊடாக செல்ல முடியும்.

177 இலக்க பேரூந்துகள் மற்றும் கடுவலையிலிருந்து கொள்ளுபிட்டி நோக்கிச் செல்லும் பேருந்துகள் தர்மபால மாவத்தை ,வோட் ஒழுங்கை, கிங்சி வீதி, ஹோடன் சந்தி , டீ.எஸ். சேனாநாயக்கசந்தி வரையான வீதியை பயன்படுத்த முடியும்.

கொழும்புக்குள் பிரவேசிப்பதற்கான மாற்று வழிகள்

காலி வீதி ஊடாக கொள்ளுபிட்டி சந்திக்கு வந்து , லிபர்டி சுற்று வட்டம் , தர்மபால மாவத்தை , பித்தல சந்தி , செஞ்சிலுவை சந்தி , லிப்டன் சு ற்றுவட்டம் ஊடாக யூனியன் ஒழுங்கைக்கு பிரவேசித்து , வோட் ஒழுங்கை மற்றும் டின்ஸ் வீதிக்கு உட்பிரவேசிக்க முடியும்.

அவலொக் வீதியிலிருந்து  தும்முல்ல பகுதியூடாக பிரவேசித்து தேர்ஷ்டன் வீதி , பூங்கா வீதி சந்தி, பித்தல சந்தியிலிருந்து ஜேம்ஸ் பீரிஸ் மாவத்தை மற்றும் தர்மபால மாவத்தைக்கு உட்பிரவேசிக்க முடியும்.

ஹோர்டன் ஒழுங்கை ஊடாக பிரவேசிக்கும் வாகனங்கள் ஹோர்டன் ஒழுங்கை ஊடாக விஜேராம சந்தியிலிருந்து தென்பகுதியை நோக்கி பிரவேசித்து வோட் ஒழுங்கை ,சொய்சா சுற்றுவட்டம் ஊடாக தர்மபால மாவத்தை , யூனியன் ஒழுங்கை மற்றும் டின்ஸ் வீதிக்கு பிரவேசிக்க முடியும். தும்முல்ல நோக்கி பயணிப்பதற்காக பௌத்தாலோக்க மாவத்தை வீதியையும் பயன்படுத்த முடியும்.

கொழும்பிலிருந்து வெளியேறுவதற்கான மாற்று வழிகள்

தர்மபால மாவத்தை , யூனியன் ஒழுங்கை அல்லது டீன்ஸ் வீதி ஊடாக சொய்சா சுற்றுவட்டத்திற்கு பிரவேசிக்கும் வாகனங்கள் பொரளை நோக்கிச் செல்வதற்காக வோட் ஒழுங்கையை பயன்படுத்த முடியும்.

வோட் ஒழுங்கை விஜேராம சந்தியில் அல்லது கிசங்சி வீதி சந்தியிலிருந்து கினிசி வீதிக்கு உட்பிரவேசித்து ஹோர்டன் ஒழுங்கை ஊடாக பொரளை நோக்கிச் செல்லமுடியும்.

பௌத்தாலோக்க மாவத்தைக்கு உட்பிரவேசிக்கும் வாகனங்கள் கல்லறை சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேற முடியும்.

யூனியன் ஒழுங்கை , டீன்ஸ் வீதி மற்றும் வோட் வீதி ஊடாக சொய்சா சுற்று வட்டத்திற்கு வந்து அவலொக் வீதிக்கு வெளியேறும் வாகனங்கள் தர்மபால மாவத்தை . நூலக சந்தி பூங்கா வீதி , ஜே.ஓ.சீ சந்தி , அராஜகிரி மாவத்தை , பிலிப் குணவர்தன மாவத்தை தும்முல்ல சுற்றுவட்டத்தின் ஊடாக வெளியேற முடியும்.

யூனியன் ஒழுங்கை டீன்ஸ் வீதி  மற்றும் வோட் வீதி ஊடாக சொய்சா சுற்று வட்டத்திற்கு வந்து தர்மபால மாவத்தை ஊடாக காலி வீதிக்கு வெளியேறும் வாகனங்கள் நூலக சந்தி, பூங்கா ஒழுங்கை , ஆனந்த குமாரசுவாமி மாவத்தை, லிபட்டி சுற்றுவட்டம் , டுப்லிகேசன்ட் வீதி ஊடாக வெளியேற முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44