'அச்சம் தவிர்': முதல் தடுப்பூசியை நான் ஏற்கிறேன் - விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த அபேவிக்கிரம

Published By: J.G.Stephan

30 Jan, 2021 | 11:32 AM
image

(எம்.மனோசித்ரா)
கொவிட் தடுப்பூசி தொடர்பில் மக்கள் மத்தியில் காணப்படுகின்ற வீண் அச்சத்தை போக்கும் வகையில் இலங்கையில் முதலாவது நபராக நான் அஸ்ட்ரசெனிகா தடுப்பூசியை ஏற்றிக் கொண்டுள்ளேன். இலங்கையில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான பிரதான செயற்பாடாக தடுப்பூசி வழங்கலுக்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலையின் (ஐ.டி.எச்.) விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த அபேவிக்கிரம தெரிவித்தார்.

ஐ.டி.எச். வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை இலங்கையில் முதலாவது நபராக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டதன் பின்னர் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மிக முக்கியத்துவமுடையதொரு நாளாகும். இந்தியாவினால் வழங்கப்பட்ட கொவிட் தடுப்பூசியை வழங்கும் செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த இந்திய அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இந்த தடுப்பூசி தொடர்பில் வழங்கப்பட்ட சகல ஆவணங்களும் தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகாரசபையினால் மிக ஆழமாக பரிசீலிக்கப்பட்டு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி உயர்ந்தபட்ச பாதுகாப்பானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் எவ்வித அச்சமும் சந்தேகமும் இன்றியே அதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இந்த தடுப்பூசியை முதலாவதாக ஏற்றிக் கொண்ட பெருமையை நான் பெறுகின்றேன். மக்கள் மத்தியில் இது தொடர்பில் தோன்றியுள்ள அநாவசிய அச்சத்தை போக்கிக் கொள்வதற்கான ஒரு வாய்ப்பாக இது அமையும் என்று நான் நம்புகின்றேன். தடுப்பூசி தொடர்பில் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள வீண் அச்சத்தை நீக்கும் வகையில் ஊடகங்கள் விழிப்புணர்வுடன் செய்திகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கின்றேன்.

தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்வதோடு அடிப்படை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றி வெகுவிரைவில் முழுமையான கொவிட் அற்ற நாடாக இலங்கையை மாற்றுவதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அதன் மூலம் எம்மால் மீண்டும் கொவிட் தொற்றுக்கு முன்னர் காணப்பட்ட வழமையான சூழலுக்கு செல்ல முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43