கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பம்

Published By: Digital Desk 4

29 Jan, 2021 | 08:46 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய அரசாங்கத்தின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனேகா கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமானது. 

அங்கொடை தேசிய தொற்று நோய் வைத்தியசாலை (ஐ.டி.எச்.) , கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் நாரஹேன்பிட்டியிலுள்ள இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசி வழங்கும் ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெற்றன.

ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தலைமையில் ஐ.டி.எச். வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்வில் அந்த வைத்தியசாலையின் விஷேட வைத்திய நிபுணர் ஆனந்த அபேவிக்கிரம முதலாவதாக தடுப்பூசியை ஏற்றிக் கொண்டார்.

அதனையடுத்து வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதியான சம்பிகா ஷீதானி உடுகமகோரலவிற்கு தடுப்பூசி ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே , ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் கொவிட் தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான லலித் வீரதுங்க, உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி வைத்தியர் ராசியா பென்சே, கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அமல் ஹர்ஷ டி சில்வா , சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர , ஐ.டி.எச். வைத்தியசாலையின் பணிப்பாளர் ஹசித அத்தனாயக்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை இன்று காலை நாரஹேன் பிட்டவிலுள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது இராணுவ சிப்பாய்கள் மூவருக்கு ஒரே சந்தர்ப்பத்தில் தடுப்பூசி ஏற்றப்பட்டது.

தடுப்பூசி வழங்கலின் தொடர்ச்சியாக இன்றைய தினம் 6 பிரதான வைத்தியசாலைகளில் சுமார் 2000 பேருக்கு தடுப்பூசியை வழங்க எதிர்பார்த்துள்ளதாக கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவிலையிலுள்ள கொழும்பு தெற்று ஆதார வைத்தியசாலை, ராகமையிலுள்ள கொழும்பு வடக்கு ஆதார வைத்தியசாலை, முல்லேரியா மற்றும் ஹோமாகம பிரதான வைத்தியசாலை ஆகியவற்றிலேயே இவ்வாறு தடுப்பூசி வழங்கப்படவுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19