இரு இந்திய உயர் மட்ட குழுக்கள் நாளை இலங்கையில்.!

Published By: Robert

08 Aug, 2016 | 04:27 PM
image

இலங்கை - இந்திய ஆணைக்குழுவில் இணக்கம் காணப்பட்ட இருநாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இந்திய மத்தியரசின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகின்றது. உத்தேச கூட்டு ஒப்பந்தத்தின் முதலாவது அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தை இதுவாகும். 

இதேவேளை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைப்பெறவுள்ள மனித வள உச்சி மாநாட்டில் கலந்துக் கொள்ளும் நோக்கில் தகவல் தொழில்நுட்ப, உள்ளுராட்சி நிர்வாகம் மற்றும் நகர அபிவிருத்தி மத்தியமைச்சர் கே.டி. ராமா ராஹோ தலையிலான குழுவினரும் இலங்கை வருகின்றனர். அவர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை இலங்கை வருகின்றனர்.

உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்புடன் இணைந்து அரசாங்கம் மனித வள உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் உலக வங்கியின் பணிப்பாளர் கலாநிதி அமிட் றோர் ஆகியோர் விஷேட உரை நிகழ்த்த உள்ளனர். 

இந்நிலையில் நாளை இந்திய மத்தியரசின் உயர் மட்ட பிரதிநிதிகள் இலங்கை வருகின்றனர். பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இலங்கை - இந்திய கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் உள் நாட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதே இந்த விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. வருட இறுதியில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளமை குறிப்பிடதக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53