ஐ. நா. அறிக்கை ஒருதலைப்பட்சமானது : தமிழ் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாகக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது - சரத் வீரசேகர

Published By: Digital Desk 4

29 Jan, 2021 | 07:32 AM
image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கை தொடர்பில் ஐக்கிய  நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒருதலைபட்சமானது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணிப்பதாக சுட்டிக்காட்டியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இல்லாத பிரச்சினைகளை இருப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு ஒரு தரப்பினர் சர்வதேச அரங்கில் இலாபமடைகிறார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

Articles Tagged Under: சரத் வீரசேகர | Virakesari.lk

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் இலங்கை தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கை நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்கள் ஒருதலைப்பட்சமான கொள்கை அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

தமிழ் பேசும் மக்களை அரசாங்கம் புறக்கணித்து செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது 2019ம் ஆண்டு ஆட்சியமைத்த அரசாங்கம் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படவில்லை.

அனைத்து இன மக்களுக்கும் அனைத்து நிலைகளிலும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கம் இன நல்லிணக்கம் என்று செய்த தவறுகளை திருத்தும் போது அதனை இன புறக்கணிப்பு என்று  கருதுவது தவறான நிலைப்பாடாகும்.

30 வருட கால சிவில் யுத்தம் முடிவடைந்த பிறகு அரசாஙகம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை துரிதப்படுத்தியது.

இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டன. சுமத்ப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை நடவடிக்கைகள் அக்காலக்கட்டத்தில் உள்ளக பொறிமுறை ஊடாக முன்னெடுக்கப்பட்டன.

2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டது.ஆட்சி மாற்றத்துக்கு மேற்குலக நாடுகள் பாரிய பங்களிப்பு செய்தன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக 30.1 பிரேரணை கொண்டு வரப்பட்டது. 30.1 பிரேரணையில் உள்ளடக்கப்பட்ட பல விடயங்கள் இலங்கையின் அரசியலமைப்பிற்கும், 

சுயாதீனத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நன்கு அறிந்தும்  முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பிரேரணைக்கு இணையனுசரணை வழங்குவதாக  தனது தனிப்பட்ட விருப்பத்தை அரசாங்கத்தின்  தீர்மானமாக தெரிவித்தார். இதன் தாக்கம் இன்றும் தொடர்கிறது என சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04