தேசியப் பட்டியல் ஆசனம் ரணிலுக்கே - அர்ஜூன ரணதுங்க

28 Jan, 2021 | 03:53 PM
image

 (இராஜதுரை ஹஷான்)

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் ஊடாக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றம் செல்ல வேண்டும். ஐக்கிய தேசிய கட்சியில் தோல்வியடைந்தவர்களில் இருந்து பாராளுமன்றம் செல்ல அவரே தகுதியானவர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கட்சியை அடிப்படையாகக் கொண்டு  அரசியலில் ஈடுபடவில்லை.  கொள்கையின் அடிப்படையில் செயற்பட்டுள்ளோம்.

இடம்பெற்று முடிந்த பொதுத்தேர்தல், ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தோல்வியடைவதற்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.2020ம் ஆண்டுக்கு பின்னர் கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டினால் கட்சி இரண்டாக பிளவடைந்தது.

ஜனநாயகத்தை அரசாங்கத்திடம் பாதுகாக்க வேண்டுமாயின் பலமான எதிர்க்கட்சி ஒன்று செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.

தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் அனைத்து தரப்பினரையும் ஒன்றினைத்து வலுவான திட்டங்களை வகுப்பது தற்போதைய  பிரதான செயற்பாடாக காணப்படுகிறது.

நாட்டின் எதிர்கால பயணத்துக்கு கட்சி அடிப்படையில் சிறந்த கொள்னை திட்டம் வகுக்காமையின் காரணமாகவே வழங்கப்பட்ட சிரேஷ்ட உப தலைவர் பதவியை ஏற்க மறுத்துள்ளேன்.ஒரு தரப்பினரது தேவைக்கமைய கட்சியை மறுசீரமைப்பதால் அடைந்த தோல்வியை சீர் செய்ய முடியாது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கப் பெற்ற ஒரு தேசிய பட்டியல் ஆசனம் தொடர்பில் இதுவரையில் ஒரு தீர்மானம் எடுக்கப்படவில்லை தோல்வியடைந்தவர்கள் மத்தியில் இருந்து கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளோம். அரசாங்கத்தின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டும் தகைமை அவருக்கு மாத்திரம் உண்டு என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58