கொவிட் விதிகளை மீறியமைக்காக தாய்லாந்தில் 89 வெளிநாட்டினர் கைது

Published By: Vishnu

28 Jan, 2021 | 12:54 PM
image

தெற்கு தாய்லாந்தில் உள்ள ஒரு பிரபலமான மதுபானசாலையில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின்போது, கொரோனா வைரஸ் விதிமுறைகளை மீறியதற்காக 89 வெளிநாட்டவர்களை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை இரவு தாய்லாந்தின் கோ ஃபாங்கன் அமைந்துள்ள மதுபானசாலைகள் மீது நடத்தப்பட்ட விசேட சோதனையின்போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்காக கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட அரசின் அவசரகால சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் அமெரிக்க, பிரிட்டன், சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட 10 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளடங்குகின்றனர்.

கைதின் பின்னர் பொலிஸாரால் வெளியிடப்பட்ட சோதனையின் புகைப்படங்களில், கைதானவர்கள் சாதாரணமான உடையணிந்தும் நெரிசலுக்கு மத்தியிலும் முகக் கவசம் அணிந்திருந்ததை வெளிக்காட்டியுள்ளது.

தாய்லாந்தின் சூரத் தானி மாகாணத்தில் உள்ள கோ ஃபங்கன் தீவு சுற்றுலாப் பயணிகளுக்கு பயணிகளுக்கு ஒரு பிரபலமான இடமாகும். இருப்பினும், கடந்த ஏப்ரல் முதல் அனைத்து சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்குள் நுழைவதற்கு தாய்லாந்து தடை விதித்துள்ளது.

தாய்லாந்தில் தற்சமயம் 15,465 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அதனால் 76 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47