அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு துறைமுகத்திற்குள் போராட்டம்

Published By: Digital Desk 3

28 Jan, 2021 | 08:29 AM
image

(ஆர்.யசி)

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு கொடுப்பதற்கு கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்திவரும் துறைமுக தொழிற்சங்கங்கள், கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகார சபையின் கீழ் கொண்டுவரும் போராட்டத்தை நாளை வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்திற்குள் இருந்தே தொடக்க தீர்மானித்துள்ளனர்.  அரசாங்கத்துடன்  இனி பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில்லை என்பதையும் தெளிவாக அறிவித்துள்ளனர்.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை  இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளின் முதலீட்டுடன் அபிவிருத்தி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக துறைமுக தொழிற்சங்கங்கள் போராடி வருகிறனர்.

இந்நிலையில் துறைமுக விவகாரத்தை கையாள ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உபகுழுவின் இறுதித் தீர்மானத்தை அரசாங்கத்திடம் தெரிவித்துள்ளதுடன், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை முழுமையாக நிராகரிப்பதாகவும், இனிமேல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் தெரிவித்துவிட்டனர்.

இதனை அடுத்து நேற்று முன்தினமும், நேற்றும் துறைமுக தொழிற்சங்கங்கள் தமக்குள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்த நிலையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும், துறைமுக அதிகார சபையின் ஒருசில அதிகாரிகள், துறைமுகத்தின் வணிக செயற்பாடுகளில் ஈடுபடும் தேசிய நிறுவனங்கள் ஆகியவற்றை கண்டித்து போராட்டத்தில் குறித்த தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய நாளை வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு  23 தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து துறைமுகத்திற்குள் பாரிய எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவும் தீர்மானித்துள்ளனர்.

இன்றைய தினம் காலையில் அஸ்கிரிய, மல்வத்து மாநாயக தேரர்களை சந்தித்தும் தமது கோரிக்கைகளை முன்வைத்து அனுமதியினை பெற்றுக்கொள்ளவுள்ளனர். இனியும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதில் பயனில்லை எனவும், 49 வீத உரிமம் இந்தியாவிற்கு செல்வது ஒட்டுமொத்த துறைமுகத்தையும் இந்தியாவிற்கு தரைவாக்கும் செயற்பாடு என்பதால் அரசாங்கத்தை வன்மையாக கண்டித்தே தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18