நிறைவேறியது யாழ்.மாநகர சபையின் வரவு - செலவுத்திட்டம்

Published By: Digital Desk 3

27 Jan, 2021 | 09:53 PM
image

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று புதன்கிழமை சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 26 உறுப்பினர்களும், எதிராக 3 உறுப்பினர்களும் வாக்களிக்க, 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

அத்தோடு  முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட் சபை அமர்வில் கலந்துகொள்ளவில்லை.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 10 உறுப்பினர்கள், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள்,  ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுயினர்களும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 2 உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒரு உறுப்பினர் என 26 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 3 உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளனர்.

அத்தோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உளுப்பினர்கள், தமிழர் விடுதலை கூட்டணியின் ஒரு உறுப்பினர் என 15 உறுப்பினர்கள் நடுநிலை வகித்துள்ளனர்.

இதன் மூலம் சபையின் வரவு செலவுத் திட்டம் 23 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகையில் இருந்த யாழ்.மாநகர சபையின் 2 ஆயிரத்து 21 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்னாள் முதல்வர் இ.ஆனல்ட்டினால் இரண்டு தடவைகள் சமர்ப்பிக்கப்பட்டு தோல்வியடைந்த நிலையில் முதல்வர் தனது பதவியை இழந்திருந்தார்.

இதனால் மாநகர சபையின் புதிய முதல்வரை தெரிவு செய்யும் கூட்டம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்ற போது புதிய முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17