குருந்தூர்மலை தொல்லியல் ஆய்வு இடம்பெறும் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்கள்: பின்னர் நடந்ததென்ன..?

Published By: J.G.Stephan

27 Jan, 2021 | 01:56 PM
image

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலய பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஆய்வு பணிகள் இடம்பெறும் இடத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற  உறுப்பினர்களான சிவஞானம் ஸ்ரீதரன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இன்றையதினம் விஜயம் செய்து நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இன்று காலை (27.01.2021) குறித்த பகுதிக்கு சென்ற பாராளுமன்ற  உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரை அங்கு காவல் கடமையில்  நின்ற இராணுவத்தினர்  உள்ளே செல்லவிடாது தடுத்ததோடு, தமது மேலதிகாரியின் உத்தரவுப்படி யாரும் உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என இராணுவ முகாமின் இராணுவ மேலதிகாரி பணித்துள்ளதாக தெரிவித்து தடை விதித்தனர்.

அவ்விடத்திலிருந்து தொலைபேசி வாயிலாக இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை அழைத்த பாராளுமன்ற உறுப்பினர் விடயம் குறித்து தெரியப்படுத்தியதை தொடர்ந்து, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகமும் தொலைபேசியூடாக சாள்ஸ் நிர்மலநாதனுடன் கலந்துரையாடியதன்  பின்னர்  தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் பங்குபற்றலுடன்  பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குருந்தூர் மலைப்பகுதிக்கு வருகை தந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகன இலக்கங்களையும்  காவல்கடமையில் இருந்த இராணுவத்தினர் பதிந்ததோடு வருகை தந்தவர்கள் தொடர்பான விபரங்களையும் பதிந்து கொண்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் , கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55