வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தைக்கொண்டு வெளிநாட்டு பணியாளர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை

Published By: Digital Desk 3

26 Jan, 2021 | 09:45 PM
image

(ஆர்.யசி)

கொவிட் தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டு பணியாளர்களை மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்துவர வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடமுள்ள நிதியத்தை பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பில் கண்டறியுமாறு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு  செய்துள்ள வெளிநாட்டு பணியாளர்களை இந்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எந்த தடையும் இல்லை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகமும் தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுநோய் காரணமாக பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை வெளிநாட்டு பணியாளர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சேகரித்துள்ள 14 பில்லியன் ரூபாய் பெறுமதியான அசையும் சொத்துக்களை பயன்படுத்தி மீண்டும் இந்நாட்டிற்கு அழைத்துவருவதில் சட்டரீதியான தடைகள் உள்ளனவா என்பது தொடர்பில் குழு விசாரணை செய்தது.

மத்திய கிழக்கில் எண்ணெய் விலை வீழ்ச்சி மற்றும் கொவிட் தொற்றுநோய் காரணமாக தொழிலை இழந்த 34,721 பணியாளர்கள் தங்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்துவருமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் நாட்டை மீண்டும் திறப்பதற்கான கலந்துரையாடல் இடம்பெற்றுவரும் நிலையிலும் தற்பொழுதும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் இவ்வாறு நாடு திரும்புவதற்கு கோரிக்கை விடுத்துள்ள வெளிநாட்டு பணியாளர்கள் குறித்து கண்டறிவதற்கு பணியகத்தினால் பொருத்தமான மாதிரியொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் கோப் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணியாற்றும் இலங்கை அதிகாரிகளுக்கு 800 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது தெரியவந்ததுடன், இவ்வளவு பாரிய தொகையை செலவுசெய்து பராமரிக்கப்படும் ஊழியர்களால் எதிர்பார்க்கப்படும் சேவைகள் வழங்கப்படுகின்றதா என்பதை கண்டறிய வேண்டுமென கோப் குழு, அதிகாரிகளுக்கு அறிவித்தது.

இலங்கை பணியாளர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது அவர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் காப்புறுதி முறைமையொன்று மற்றும் உரிய தரப்பினருடன் உடன்படிக்கைகள் மேற்கொள்ளும் அவசியம் தொடர்பில் கவனம் செலுத்திய கோப் குழு, அந்த தேவையை பூர்த்தி செய்யும் புதிய காப்புறுதி முறைமையொன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியமானது என பரிந்துரைத்தது. இதன்போது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு  செய்துள்ள வெளிநாட்டு பணியாளர்களை இந்த நிதியத்தை பயன்படுத்தி மீண்டும் நாட்டுக்கு அழைத்துவர எந்த தடையும் இல்லை என பணியகத்தின் தலைவர் இதன்போது வெளிப்படுத்தினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31