கொரோனா கைதிக்கு வழங்கப்பட்ட உணவுப் பொதியில் சிக்கிய பொருட்கள்  : அதிகாரி பணி நீக்கம்

Published By: Digital Desk 4

26 Jan, 2021 | 05:58 PM
image

(செ.தேன்மொழி)

கந்தக்காடு கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சைப் பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்கும் நோக்கத்தில் சட்டவிரோதமாக பொதியொன்றை பெற்று வைத்திருந்த சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுத் தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது ,

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை முகாமில் சிகிச்சைப் பெற்றுவரும் கைதியொருவருக்கு வழங்குமாறு கொடுக்கப்பட்ட உணவுப் பொதியொன்றை , அங்கு சேவையில் ஈடுபட்டிருந்த சிறைச்சாலை அதிகாரியொருவர் பெற்றுக் கொண்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்போது , சம்பந்தப்பட்ட சிறைச்சாலை அதிகாரியின் அறை சோதனைச் செய்யப்பட்டுள்ளதுடன் , அங்கிருந்து பொதியொன்றும் கைப்பற்றப்பட்டது. அந்த பொதியில் உணவு , 10 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் புகைத்தலுக்காக பயன்படுத்தப்படும் லைட்டர்கள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன.

இதுத் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் , இந்த விவகாரம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரியின் பணி இடை நிறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50