ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தில் இன்று காலை பரிசுத்த பாப்பரசரை சந்தித்து ஆசிபெற்றுக் கொள்ளவுள்ளார்.

பரிசுத்த பாப்பரசரின் அழைப்பை ஏற்று இலங்கையிலிருந்து ரோம் புறப்பட்டுச் சென்ற ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்று பிற்பகல் ரோம் குமுதினோ சர்வதேச விமானநிலையத்தை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நாளை வத்திக்கானில் உள்ள பிரபலமான அருங்காட்சியகத்தையும் பார்வையிடவுள்ளார்.