நாளை மறுதினம் நாட்டை வந்தடையும் இந்திய தடுப்பூசிகள்

Published By: Vishnu

26 Jan, 2021 | 10:03 AM
image

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 500,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை (டொஸ்கள்) இலங்கைக்கு வழங்க இந்திய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மேலும் தடுப்பூசி தொகையானது நாளை மறுதினம் வியாழக்கிழமை நாட்டை வந்தடையும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ இந்தியாவில் இருந்து 600,000 தடுப்பூசிகள் பெறப்படும் என்று கூறியிருந்தார்.

எவ்வாறெனினும் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால உறவையும், கடந்த ஆண்டு கொவிட் -19 தொற்றுநோயை எதிர்கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கருத்தில் கொண்டு, 500,000 க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை வழங்க இந்தியா முடிவு செய்துள்ளது அரசாங்கம் கூறியுள்ளது.

இதேவேளை தடுப்பூசி வழங்குவது தொடர்பான அடிப்படை ஒத்திகை தற்போது வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்நாட்டிற்கு கிடைக்கவுள்ள தடுப்பூசி தொகையில், முதலாவது கட்டம் கிடைத்தவுடன் கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு பங்களிக்கின்ற முன்னணி உறுப்பினர்களுக்கு இதனை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு இலங்கைக்கு கிடைக்கின்ற இந்த ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனிகா தடுப்பூசியானது இந்தியாவின் தயாரிப்பாகும்.

இந்த தடுப்பூசியை இலங்கையில் பயன்படுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் அனுமதி கிடைத்துள்ளது.  

அத்துடன் இந்த தடுப்பூசிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு இலவசமா கிடைக்கப் பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27