காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மஹிந்த வேண்டுகோள்

Published By: Digital Desk 4

25 Jan, 2021 | 06:05 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வரலாற்றில் நாங்கள் அதிகாரத்துக்கு வந்த, எப்போதும் நீதிமன்ற சுயாதீனத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொண்டு சட்டத்தை வளைக்க முயற்சிக்கவில்லை.

சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும். அத்துடன் காலம் கடந்த சட்டங்களை மாற்றியமைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நீதிமன்ற இல்லம் கட்டட தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டிய பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதியை நிலைநாட்டும் நாடொன்றின் அடிப்படை விடயமாக நீதித்துறை கட்டமைப்பு உறுதியாக இருப்பதாகும். அதற்கான நடவடிக்கையை தற்போது நாங்கள் மேற்கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது மக்கள் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் பல பிரரேரணைகளை முன்வைத்திருந்தோம். அதற்காக மக்களின் ஆணை எமக்கு கிடைத்தது. நீதிமன்ற அபிவிருத்தி நடவடிக்கையும் எமது அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றாகும். 

மேலும் அரசியல் ரீதியில் நாங்கள் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும்  சுயாதிபத்திய அதிகாரம் நிலைத்திருப்பது நாட்டு மக்களிடமாகும். அதனால் நாங்கள் நாட்டுக்கு முன்வைக்கும்  கொள்கை மற்றும் மறுசீரமைப்புகள் மக்கள் மத்தியில் தீர்மானிக்கப்படுகின்றன.

வரலாற்றில் நாங்கள் அதிகாரத்துக்கு வந்த, எப்போதும் நீதிமன்ற சுனாதீனத்தன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தோம். தனிப்பட்ட தலையீடுகளை மேற்கொண்டு சட்டத்தை வலைக்க நாங்கள் முயற்சிக்கவில்லை.

அதனால் மக்கள்   சுயாதிபத்தியம் தேசிய பாதுகாப்பு அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி, மனித உரிமை மற்றும் சட்டத்தின் ஆட்சியை போன்று நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் வகையிலான அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாகவும் நாங்கள் மக்களின் அவதானத்துக்கு கொண்டுவந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள். அதனை சட்டவரைபு படுத்துவதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

மேலும் காலம் கடந்த சட்டங்கள், செயற்பாடுகள் மற்றும் சட்ட திட்டங்களால் எமது மக்கள் இன்னும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இதிலிருந்து மக்களை பாதுகாப்பது எமது பொறுப்பாகும்.

தற்போது இருக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை நீதிமன்றம் வரை கொண்டுசெல்லாமல், இணக்கசபைகளை வலுப்படுத்தி, இணக்கசபைகளினுடாக தீர்த்துக்கொள்ள முடியுமானவற்றை அதன் மூலம் தீர்த்துக்கொள்ள நாங்கள் கவனம் செலுத்தியிருக்கின்றோம்.

அதேபோன்று வழக்கு விசாரணைகள் தாமதிப்பது மக்களுக்கு பாரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. சிலர் தங்களின் வாழ்நாள் பூராகவும் வழக்கு விசாரணைகளில் ஈடுபடுகின்றனர். அவர்கள் மரணிக்கும்வரை தீர்ப்பு கிடைப்பதில்லை.

அதனால் இந்த நிலைமையை மாற்றியமைப்பதாக இருந்தால் தற்போது அமைக்கப்படும் நீதி இல்லம்,மக்கள் மயமான நீதி இல்லாமாக மாற்றபடவேண்டும். முன்னர் புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தின் மோசமான நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டாலும் அதற்கு தீர்மானங்கள் எட்டப்படவில்லை.

ஆனால் நாங்கள் அதற்கு நிலையான தீர்வொன்றுக்கு வந்திருக்கின்றோம். 2014இல் இதுதொடர்பாக நாங்கள் கலந்துரையாடினோம். ஆனால் அரசாங்கம் மாறியதன் பின்னர் அந்த நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன. தற்போது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். 

மேலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை டிஜிடல் மயமாக்குவதே எமது இலக்காகும். அதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.  அடுத்த மாதத்தில் இருந்து அமுலுக்கு வரும் என நம்புகின்றேன்.

பெளதீக வளங்களை ஏற்படுத்துவதன் மூலம் மாத்திரம் வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த முடியாது. அதற்கான மனித வளம் அதிகரிக்கப்படவேண்டும். நீதித்துறை சார்ந்த வெளிநாட்டு பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.

எனவே சட்டத்தை புதுப்பித்துக்கொண்டு, நீதி மாதமதிப்பதை தடுப்பதற்கான செயற்திறமையான முறைமையொன்றின் மூலம் பிரச்சினைகளை தீர்க்கும் முறை வெற்றியளிக்கவேண்டுமாக இருந்தால், அதன் பங்குதாரர்களான நீதிமன்றம், நீதிபதிகள், மற்றும் பொது மக்களாக நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து காலம் கடந்த சட்டத்தில் இருந்து வெளியில் வந்து மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அத்துடன் சட்டம் அனைவரும் சமமானதாக இருக்கவேண்டும். பொது மக்களும் சட்டத்தை மதித்து நடக்கவேண்டும். 

அத்துடன் ஒருநாடு ஒரு சட்டம் என்ற தேசத்தின் தேவையை கட்டியெழுப்பும் நடவடிக்கைக்கு அடித்தளமிட்டிருக்கின்றோம். அதற்காக பொருத்தமான நீதி கட்டமைப்பை புதுப்பித்துக்கொள்ள இந்த துறையைச்சார்ந்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58