சமூக ஊடகங்களின் சுதந்திரமும் வெளிக்கிளம்பும் சாதியம்சார் வெறுப்புப் பேச்சுக்களும்

26 Jan, 2021 | 02:55 PM
image

ஆர்.ராம்

2020 ஒக்­டோபர் 18ஆம் திகதி அன்று ஞாயிற்­றுக்­கி­ழமை கிளி­நொச்சி பெரி­ய ­ப­ரந்தன் பகு­தியில் அமைந்­துள்ள பிள்­ளை யார் ஆல­யத்­தி­லி­ருந்து வெளியே வந்த உயர்­த­ரத்தில் கல்வி கற்கும் மாணவன், கவ­லை­யு டன் சரஸ்­வதி பூஜைக் கால­மிது.

நான் சக­ல க­லா­வல்­லி­மாலை பாட ஆசை­யோட கோயி­லுக்கு வந்தன். இங்க சக­ல­க­லா­வல்­லி­மா­லையோ தேவா­ரமோ பாட வேண்டாம் எண்டு சொல்லி என்னை கோயிலில் இருந்து கலைச்சு விட்­டார்கள் என்­கிறார்.

இதற்கு என்ன காரணம் என அவ­ரி­டமே வினா­வி­ய­போது,

இப்­பிடி கன தட­வைகள் சொல்­லி­யி­ருக்­கினம். எங்கள் சாதி தான் காரணம் எண்டு எல்­லாரும் சொல்­லினம். நானும், எங்­கட குடும்­பமும் இந்தக் கோயிலில் பல தட­வைகள் இவ்­வாறு அவ­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கின்றோம். ஒரே ஊரில் வசிப்­ப­வர்கள் என்­ப­தால இந்த விட­யங்­களை பெரிது படுத்­து­றது இல்ல. ஆனா இது­பற்றி கேள்வி கேக்க இங்கு யாரும் இல்லை. இந்த நிலைமை தொட­ருது. நாங்­களும் எத்­தனை நாளைக்கு பொறுத்­துப்­போ­றது' என்று கூறு­கின்றார்.

இந்த சம்­ப­வத்தை பிர­தேச ஊட­க­வி­ய­லா­ள­ரான மு.தமிழ்ச்­செல்வன் சமூக ஊட­கங்­களில் ஒன்­றான முக­நூலில் பதிவு செய்தார். அப்­ப­தி­வா­னது, முக­நூலில் வெளி­யா­னதும், அச்­சம்­பவம் பற்­றிய பொது­வெளிக் கருத்­தா­டல்கள் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தன. அதில் பரி­மாற்­றப்­பட்ட கருத்­துக்­களை ஒட்­டு­மொத்­த­மாக அவ­தா­னித்த போது, மாண­வனின் குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு இலக்­கா­கி­யி­ருந்த ஆலய நிரு­வா­கத்­தினர் சார்­பாக ஒரு­சில கருத்­துக்­களே இருந்­தன. ஆனால் கோயி­லி­ருந்து

வெளி­யேற்­றப்­பட்­ட­தாக கூறிய மாண­வ­னு க்கு ஆத­ர­வ­ளிக்கும், மற்றும் உள ரீதி­யான ஆற்­றுப்­ப­டுத்தும் கருத்­துக்கள் பல காணப்­பட்­டன.

அவ்­வாறு காணப்­பட்ட கருத்­து­களில், நிரு­வா­கத்­தி­னரின் தவறை சுட்­டிக்­காட்­டும் வகையில் அமைந்திருந்த கருத்துக்களில், இத்­தகை காலம் கடந்தும் சாதியக் கட்­ட­மை ப்பை பின்­பற்றுவதை விமர்சிக்கிக்கும் வகையிலான கருத்துக்கள் அதிகமாக வெளிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றில் 'இப்­ப­டி­யா­ன­வர்கள் இன்னும் உயிர்­வாழ்­கின்­றார்­களா?, அவரை செருப்பால் அடி­யுங்கள், போரில் உயி­ரி­ழக்­காது போய்­விட்­டாரே?' என்­ப­துள்­ளிட்ட வார்த்தைப் பிர­யோ­கங்கள் தாராளமாக பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன.

இங்கு மாணவன் தன்னை வெளி­யேற்­றி­ய­போது நிரு­வா­கத்­தினர் பயன்­ப­டுத்­தி­ய­தாக கூறிய வார்த்­தைகள் எவ்­வாறு வெறுப்­பினை தூண்­டி­யதோ அதை­யொத்­தா­கவே மாண­வ­னுக்கு சார்­பாக அல்­லது ஆத­ர­வாக நிரு­வா­கத்­தி­னரை நோக்கி வெளிப்­ப­டுத்­தப்பட்ட கருத்­துக்­களும் காணப்­பட்­டன.

சமூ­க­மொன்றில் உயர் சாதியினர், கீழ் சாதி­யினர் என்ற இரு­வ­கை­யினர் உள்­ள­தாக பொது­வான வகைப்­ப­டுத்தல் உள்­ளது. அவ்­வி­த­மான வகைப்­ப­டுத்­த­லுக்குள் உயர் சாதி­யி­னரின் பிர­தி­ப­லிப்­புக்கள் மற்றும் கருத்­துக்கள் வெவ்வேறு தருணங்களில் வெறுப்பு பேச்சை தூண்­டி­வி­டு­கின்­றன. அதே­ச­மயம், உயர் சாதி­யி­ன­ராக கரு­தப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு எதி­ரான வெறுப்­புப்­பேச்­சு­களும் பதி­லுக்கு காணப்­ப­டு­கின்­றன.

இதற்­கான தள­மாக கருத்­துச்­சு­தந்­திரம் அதி­க­ளவில் காணப்­படும் சமூக ஊட­கங்­களே பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. அண்­மைய காலங்­களில் சமூக ஊட­கங்கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு இந்த விட­யத்தில் உட­னுக்­குடன் பிர­தி­ப­லிப்­புக்கள் செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

அதா­வது, சாதியப்­பா­கு­பாட்டால் பாதிக்கப்­ப­டு­ப­வர்­களும் அதற்­காக குரல் கொடுப்­ப­வர்­களும், சாதியப்­பா­கு­பாட்டை ஏற்­றுக்­கொள்­கின்­ற­வர்­களும் அது­பற்றி கருத்து வெளி­யி­டு­பர்­களும் சமூக ஊட­கங்­களில் வெறுப்பு பேச்­சுக்கள் தூண்­டப்­ப­டு­வ­தற்­கான காரண கர்த்­தாக்­க­ளா­கின்றனர்.

முன்­னைய காலத்தில் நபர்­க­ளுக்கு நபர்கள் நேர­டி­யாக வார்த்தைப் பரி­மாற்­றங்­களில் ஈடு­படும் போது மட்­டுமே வெளிப்­ப­டுத்­தப்­பட்டு வந்த வெறுப்பு பேச்­சுக்கள் வெகு­ஜன ஊட­கங்­களில் அவை வெளி­ வ­ராத நிலை­மையே நீடித்­தி­ருந்­தன.

வெகு­ஜன ஊட­கங்­களில் வெளி­யி­டப்­படும் சிறுகதை­களில் கூட அவை பிர­சு­ரிக்­கப்­ப­டாத நிலையே இருந்­தது. அவ்­வி­த­மாக காணப்­பட்ட நிலை­மை­யா­னது தற்­போது முழு­மை­யாக மாற்­ற­மடைந்­து­விட்­டது. தற்­கா­லத்தில் சமூக ஊட­கங்கள் அனைத்து மக்­களின் கைகளிலும் உள்­ளன. அவர்கள் தாம் கொண்ட கொள்­கை­களும் நம்­பிக்­கைகளும், சிந்­த­னை­க­ளுமே மேலா­னவை என்றும் ஏனை­யவை தாழ்ந்­தவை என்றும் வெளிப்­ ப­டை­யாக பதி­வி­டு­கின்­றனர்.

இது கருத்­து­ரு­வாக்­கத்­திற்கும், உட­ன­டி­யான வெளிப்­ப­டுத்­தல்­க­ளுக்கும், சமூ­கத்தின் மீதான பற்­றுக்கும் அடிப்­ப­டை­யாக அமைந்­தாலும் இவ்விதமான கருத்­துப்­ப­ரி­மாற்­றங்கள் எதிர்­ம­றை­யான நிலை­மை­க­ளையும் ஏற்­ப­டுத்­து­கின்­றது.

சாதியப்­பா­கு­பாட்டைப் பொறுத்­த­வரை வட­மா­கா­ணத்தில் 1966இலி­ருந்து தீண்­ டாமை ஒழிப்பு போராட்­டங்கள் நடை­பெற்று வரு­கின்­ற­போதும், தற்­போது வரையில் சாதியக் கட்­ட­மைப்­புக்கள் இருந்து கொண்­டு தான் இருக்­கின்­றன. குறிப்­பாக கூறு­வ­தா னால் பொது­வெ­ளியில் அவை, வெளிப் ப­டா­த­போதும், திரு­மண பந்­தங்­களின் போது வெளிப்­படும் நிலை­மைகளே அதிகமாக காணப்­ப­டு­கின்­றன.

2018ஆம் ஆண்டு, தென்­ம­ராட்­சிப்­ப­குதி யில் வரணி சிமிழ் அம்மன் ஆல­யத்தில் வரு­டாந்த திரு­வி­ழாவின் போது தேர் இழுப்­ப­தற்கு பிற சாதி­யி­னரை அனு­ம­தித்­து­விடக் கூடாது என்­ப­தற்­காக, ஜே.சி.பி. உழவு இயந்­தி­ரத்­தினை பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தமை சாதியக் கட்­ட­மைப்பு எவ்­வ­ளவு தூரம் வேரூன்றி இருக்­கின்­றது என்­பதை அப்­பட்­ட­மாக காண்­பிக்கும் சம்­ப­வ­மாக இருக்­கின்­றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த வயோ­திப பெண்­ணொ­ருவர், இச்­சம்­ப­வத்­தினை பார்த்து துக்­க­ம­டைந்து பின்னர் மூன்று நாட்­களில் மர­ணத்­தினை எய்­தினார் என்றும் அப்­ப­குதி பிர­தே­ச­வா­சி­க­ளினால் கூறப்­பட்டது. ஆகவே நீடித்­திருக்கும் சாதியக்­கட்­ட­மைப்பின் தாக்கம் மர­ணத்தை கூட ஏற்­ப­டுத்தவல்­லது என்­ப­தையும் கவ­னிக்க வேண்­டி­யுள்­ளது.

இத்­த­கைய பின்­ன­ணியில், மேற்­படி விட­யத்­தினை நோக்­கு­கின்­ற­போது, குறித்த மாணவன் வெளி­யேற்­றப்­பட்­டதன் பின்­ன­ணியும் அதற்­காக கூறப்­படும் கார­ணங்­க­ளை யும் விலக்­கிப்­பார்க்க முடி­யா­துள்­ளது.

நபர் ஒரு­வ­ரி­னது மதம், இனம், தேசியம், குலம், நிறம், பரம்­பரை, பால்­நிலை அல்­லது ஏனைய அடை­யாளக் கார­ணி­களின் அடிப்­ப­டையில் தாக்­குதல் தொடுக்கும் வகையில் அமைந்த இழி­வான அல்­லது பாகு­பா­டு­மிக்க மொழி­யா­டலைப் பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­படும் பேச்சு, எழுத்து அல்­லது நடத்தை வடிவில் அமைந்த எந்­த­வொரு தொடர்­பா­டலும் வெறுப்புப் பேச்­சாகும் என்று வெறுப்பு பேச்சு மீதான ஐக்­கிய நாடுகள் சபையின் மூலோ­பாயம் செயற்­பாட்டு திட்டம் வரை­ய­றுத்­துள்­ளது.

அத­ன­டிப்­ப­டையில் இந்த விடயம் சம்­பந்­த­மாக, குறித்த ஆல­யத்தின் பரி­பா­லன சபையின் தலை­வ­ராக இருக்கும் நா.அர­ச­ரத்­தி­னத்­திடம் (தற்­போது பத­வியில் இல்லை) வின­வி­ய­போது, 'நாங்கள் எந்த பார­பட்­சத்­தி­னையும் காண்­பிக்­க­வில்லை.

அவ்­வி­த­மான எந்­த­வொரு விட­யமும் இங்கு நடை­பெ­ற­வில்லை. தேவாரம் பாடு­வ­தற்கு நிரு­வா­கத்­தினால் பெண் ஒருவர் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். ஆகவே அவர் தான் பாட­வேண்டும். கோவிலின் விட­யங்­களை தீர்­மா­னிப்­ப­தற்கு நிர்­வாகம் இருக்­கின்­றது. ஆகவே இந்த விட­யத்தில் நிரு­வாகம் தீர்­மானம் எடுத்­துள்­ளது.

அதனைப் பலர் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். தேவாரம் பாடு­வ­தற்கு ஒருவர் இருக்­கும்­போது பிறி­தொ­ருவர் இடையில் வந்து செயற்­ப­டு­வது பொருத்­த­மற்­றது. ஆல­யத்­தினை நிரு­வ­கிப்­ப­தற்­கா­கவே எம்மை நிய­மித்­தி­ருக்­கின்­றார்கள். அதனை முறை­யாக செய்­கின்­ற­போது இவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்­களை சுமத்­து­கின்­றார்கள். எம்மைப் பொறுத்­த­வ­ரையில் ஆலய நிரு­வா­கத்தின் தீர்­மா­னங்­களை அனை­வரும் ஏற்­றுக்­கொள்ள வேண்டும்' என்று குறிப்­பி­டு­கின்றார்.

அதே­நேரம், மாண­வனின் தயார் குறிப்­பி­டு­கையில்,

நாங்கள் கட­வுளை பூக்­களை வைத்து வணங்­கு­வ­தற்கும், மணி அடிப்­ப­தற்கும் இட­ம­ளிக்­கி­றார்கள் இல்லை. எனது மக­னொ­ருவர் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்டார். அவ­ருக்கு வைத்த நேர்த்திக் கடனை நிறை­வேற்றச் சென்றோம். எங்­களை கோவி­லுக்­குள்ளே யார் விட்­டது என்று கேள்வி கேட்­டார்கள். கடு­மை­யான வார்த்­தை­களைப் பயன்­ப­டுத்­தி­னார்கள். கோவில் மணியை ஒழித்து விட்­டார்கள். நாங்கள் தேவாரம் பாடி­விடக்கூடாது என்­ப­தற்­கா­கவே தேவாரம் பாடு­வ­தற்கு ஒருவர் நிய­மிக்­கப்­பட்டார். இப்­படி பல சம்­ப­வங்கள். ஆனாலும் எனது மகனை தேவாரம் பாடக் கூடாது என்று கூறி வெளி­யேற்றும் போது அவர்கள் பயன்­ப­டுத்தி வார்த்­தைகள் என்­றுமே என்னால் மறக்க முடி­யா­தவை. அத்­தனை பேருக்கும் முன்னால் தலை­கு­னிந்து நின்­ற­தையும் எத்­தனை நாள் போனாலும் மறக்­கவே முடி­யாது.

நாங்­களும் மனி­தர்கள் என்ற அடிப்­ப­டையில் கூட அவர்கள் சிந்­தித்­தி­ருக்­க­வில்லை. அது தான் எங்­க­ளுக்­குள்ள கவலை என்றார். 

இதே­வேளை, இந்த சம்­பவம், அப்­ப­கு­தி­யெங்கும் பேசு­பொ­ரு­ளா­ன­தோடு, கரைச்சி பிர­தேச சபை நிரு­வா­கத்­தி­னரின் கவ­னத்­திற்கும் கொண்டு செல்­லப்­பட்­டது. இத­னை­ய­டுத்து கரைச்சி பிர­தேச செய­லாளர் பா.ஜெயா­க­ரனின் கவ­னத்­திற்கு சில சமூக செயற்­பாட்­டா­ளர்­களால் கொண்டு செல்­லப்­பட்­டி­ருந்­தது.

அதன்­போது, இந்­த­வி­டயம் சம்­பந்­த­மான விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­ப­தற்கும், சுமூ­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்துவதற்காக, கரைச்சி பிர­தேச கலா­சார உத்­தி­யோ­கத்த­ரி­டத்தில் விடயம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. மேலும், இந்த விடயம் சம்­பந்­த­மாக பார­பட்­சமற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் பிர­தேச செய­லாளர் பா.ஜெயா­கரன் தெரி­வித்­தி­ருந்தார்.

இந்­நி­லையில், கரைச்­சி ­பி­ர­தேச கலா­சார உத்­தி­யோ­கத்தர் தி.கார்த்­தி­கேயன் இந்­த­வி­ட யம் சம்­பந்­த­மாக சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்­க­ளி னை நேர­டி­யாக சந்­தித்­தி­ருந்தார். அவர்­களின் கருத்­துக்­களையும் பெற்றிருந்தார். அத்­துடன் இந்த முரண்­பா­டு­க­ளுக்­கான தீர்­வினை அளி ப்­ப­தற்­கான பரிந்­து­ரை­யொன்­றையும் செய்­வ­தற்கு தயா­ராகி வரு­கின்றார்.

தற்­போது இடம் மாற்றம் பெற்­றுள்ள தி.கார்த்­தி­கேயன் 'நான் அந்த (பெரிய பரந்தன் பிள்­ளையார் ஆலயம்) விடயம் சம்­பந்­த­மாக பகுப்­பாய்வு அறிக்­கை­யொன்றை தயா­ரித்­துள்ளேன். அத­னை­வி­ரைவில் பிர­தேச செய­லா­ள­ருக்கு கையளிக்­க­வுள்ளேன். அத­ன­டிப்­ப­டையில் அவரால் அடுத்த கட்டச் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முடியும் என்று நம்­பு­கின்றேன். குறிப்­பாக, அதில் இந்த விட­யத்­திற்கு நிரந்­தர தீர்­வுக்கான பரிந்­து­ரை­க­ளையும் செய்­தி­ருக்­கின்றேன்' என்று குறிப்­பிட்டார்.

விசா­ரணை அறிக்­கையின் உள்­ள­டக்­கங்­களை பகிர்ந்து கொள்­வ­தற்கு கலா­சார உத்­தி­யோ­கத்தர் தயா­ராக இருக்­க­வில்லை. 'மனித உணர்ச்­சி­களுடன் சம்­பந்­தப்­பட்ட விட­யங்கள்' என்­ப­தாலும், இட­மாற்றம் பெற்ற அரச ஊழி­ய­ராக இருப்­பதாலும் அறிக்­கையை சமர்ப்­பிப்­ப­தற்கு முன்­ன­தாக அதி­லுள்ள எந்­த­வித தக­வல்­க­ளையும் பகிர்­வ­தற்கு அவர் விரும்­பி­யி­ருக்­க­வில்லை. ஆனால் இத்­த­கைய சமூ­கப்­பி­ரச்­சி­னைகள் நீடிக்­க­க்கூ­டாது என்ற இறுக்­க­மான நிலைப்­பாட்டை அவர் வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இந்­நி­லையில், நீண்­ட­கால இட­து­சாரிச் செயற்­பாட்­டா­ளரும் இலங்­கையில் சாதி­யமும் அதற்­கெ­தி­ரான வெகு­ஜன போராட்­டங்­க­ளையும் முன்­னெ­டுத்துக் கொண்­டி­ருப்­ப­வ­ரு­மான, சி.க.செந்­திவேல் தெற்­கா­சியா பொது­வாக நிலப்­பி­ர­புத்­துவ கட்­ட­மைப்பில் உரு­வாக்­கப்­பட்­ட­தாக உள்­ளது.

இத­ன­டிப்­ப­டை­யி­லே­யே சமூக கட்­ட­மைப்பும் காணப்­ப­டு­கின்­றது. இதற்கு இலங்­கையும், உரி­மை­க­ளுக்­காக போரா­டு­கின்ற தமி­ழினம் வாழும் வடக்கு கிழக்கும் வேறு­பட்­ட­தாக இல்லை.

சேர,சோழ, பாண்­டிய காலத்து வர­லா­று­களை மையப்­ப­டுத்­திய பழ­மை­வாத சிந்­த­னைகள் பரம்­பரை ரீதி­யாக கடத்­தப்­பட்டு இன்­னமும் பழை­மை­வா­தத்திற்­குள்ளே சமூ­கங்கள் உட்­பட்­டி­ருக்கும் நிலையே நீடிக்­கின்­றது.

அதி­லி­ருந்து வெளி­வ­ரு­வ­தற்கும் சமூ­கங்கள் தயா­ராக இல்லை. வர­லாற்றுக்­காலம் முதல் தற்­போது கடல் கடந்தும் இந்த விடயம் நீடித்­துக்­கொண்­டி­ருக்­கிறது என்று சாதியக் கட்­ட­மைப்பு பற்றி குறிப்­பிட்டார்.

அத்­துடன் விசே­ட­மாக யாழ்ப்­பா­ணத்­தினைக் கருத்­திற்­கொண்டால் 1966களில் சண்­மு­க­தா­சனின் தலை­மையில் இதற்கு எதி­ரான போராட்­டங்கள் வெகு­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டன. பின்னர், விடு­தலை இயக்­கங்கள் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வந்­தன. இக்­கா­லப்­ப­கு­தியில், சாதியக் கட்­ட­மைப்பு ஒழிக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை. மாறாக கடு­மை­யான நிலை­மை­யி­லி­ருந்த தீண்­டாமை மேலெ­ழாது பேணப்­பட்­டி­ருந்­தது.

ஆகவே, போர் நிறை­வுக்கு வந்தாலும் அதனால் பாதிக்­கப்­பட்ட சமூ­கத்­தினுள் இவ்­வா­றான நிலை­மைகள் அற்­றுப்­போகும் என்றும் கூறு­வ­திற்கு இல்லை. உலகக் கண்­ணோட்­டத்தில் பழை­மை­வா­தத்­தினை மையப்­ப­டுத்­திய பன்­மைத்­து­வத்­திற்கு தயா­ராக இல்­லாத சமூக கட்­ட­மைப்பில் சிந்­தனை மாற்­றத்­தினை காண­மு­டி­யாது என்றும் அவர் திட­மாக கூறினார்.

இதே­வேளை, சமூ­க­வி­யல்­துறை சிரேஷ்ட விரி­வு­ரை­யாளர் கலா­நிதி.ஜீவ­சுதன், சாதி­யப்­பா­கு­பாடு தொடர்­பாக பொது­வெ­ளியில் பகி­ரங்­க­மான கலந்­து­ரை­யா­டல்கள் அவ­சி­ய­மாக இருக்­கின்­றன. ஏனென்றால், சமூ­கத்தின் அனைத்து மட்­டங்­களிலும் மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் உளப்­பாங்­கான மாற்­ற­மொன்­றையே செய்ய வேண்­டி­யுள்­ளது.

விடு­த­லைப்­போ­ராட்­டங்கள் நடை­பெற்ற காலத்­திலும், விடு­தலை இயக்­கங்­களின் நிர்­வாக காலத்­திலும், இந்த விடயம் மழுங்கி காணப்­பட்­டது உண்­மைதான். ஏனென்றால் விடு­தலை இயக்­கங்­களின் நிர்­பந்­தத்­தினால் விரும்­பியோ விரும்­பா­மலோ அனை­வ­ராலும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. அது­வெ­று­மனே காட்­டா­யத்தின் அடிப்­ப­டையில் நடை­பெற்ற விட­ய­மாகும். உள ரீதி­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட விடய­மல்ல.

தற்­போது விடு­தலை இயக்­கங்கள் இல்லை. காட்­ட­யப்­ப­டுத்­தல்­களோ, நிர்­பந்­த­களோ இல்லை. ஆகவே உள­ரீ­தி­யாக காணப்­பட்ட விட­யங்கள் வெளிப்­பட ஆரம்­பிக்­கின்­றன. அது­மட்­டு­மன்றி பல்­லின, மதச் சூழலை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தயா­ராக இல்­லாத நிலை­மையும் உள்­ளது.

அத­னை­வி­டவும், இவ்­வி­த­மான விட­யங்­களை அடி­ம­னங்­களில் அமிழ்த்தி வைக்­கின்ற அல்­லது பிரச்­சி­னைகள் எதற்கு என்று பின்­வாக்­கு­கின்ற, தொடர்­தேச்­சி­யாக குரல்­கொ­டுப்­ப­தற்கு தயங்­கு­கின்ற, நிலை­மை­களே நீடிக்­கின்­றன. அண்­மையில் கிளி­நொச்­சியில் உள்ள பாட­சா­லை­யொன்றில்

மாணவன் ஒரு­வ­ருக்கு சாதியை அடிப்­ப­டை­யாக கொண்ட பிரச்­சினை எழுந்­த­போது கோட்­டக்­கல்­விப்­பி­ரி­விடம் அது­பற்றி முறைப்­பாடு செய்­வ­தற்கு முனைந்­த­போது, இந்தப் பிரச்­சி­னையை பெரிது படுத்­தாது இத்­தோடு விட்­டு­வி­டுங்கள். இது­பற்றி எங்கும் பேசா­தீர்கள் என்று கூறப்­பட்­டுள்­ளது.

இவ்­வி­த­மான செயற்கை ரீதி­யான மட்­டுப்­ப­டுத்­தல்கள் நீடிப்­பதும், அதில் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களும், அமை­தி­யா­கி­வி­டு­வதும் தற்­போது வரையில் சாதியக் கட்­ட­மைப்பு நீடிப்­ப­தற்கு வழி­வ­குப்­ப­தாக உள்­ளது என்­கிறார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணியும் மல்­லாகம் நீதிவான் நீதி­மன்றின் பதில் நீதி­ப­தி­யு­மான சோ.தேவ­ராஜா, அண்­மைய நாடான இந்­தி­யாவில் சாதிய ஒழிப்­புக்­காக செயற்­பட்­ட­வரும், இந்­திய அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்­தினை வரைந்­த­வ­ரு­மான டாக்டர். அம்­பேத்கார், ஆரம்­பத்தில் சைவ சம­யத்­தி­லி­ருந்து வெளி­யேறி, பௌத்த சம­யத்தில் இணைந்து கொண்­டி­ருந்தார். அவருடன் சில நூற்­றுக்­க­ணக்­கா­ன­வர்­களும் சென்­றி­ருந்­தனர். சைவ சம­யத்தை பின்­பற்­று­ப­வர்­களின் இறுக்­க­மான சாதிய சட்­ட­மைப்­புக்­க­ளையும், அதனால் வெளிப்­ப­டுத்­தப்­பட்ட வெறுப்புப் பேச்சுக்களையும் சகிக்க முடியாது அவர் அவ்வாறு மதம் மாறியிருந்தார் என்று சாதியமும், அதன் பால் எழுந்த வெறுப்புப் பேச்சின் தாக்கத்தினையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், யாழ்ப்பாணத்தில், வைரமுத்து மாஸ்டர் என்பவர் 1960களில் கரவெட்டியிலும், புத்தூரிலும் பௌத்த பாடசாலைகளை நிறுவினார். இதற்கும் சைவ சமயத்தவர் களால் பின்பற்றப்பட்ட கடுமையான தன்மை களைக் கொண்ட சாதியக் கட்டமைப்பே காரணமாக இருந்தது.

இவ்வாறு வரலாறு இருக்கையில் அந்த வரலாறு முன்னோக்கிச் செல்வதற்கு பதிலாக தற்போது பின்னோக்கிச் செல்வதாய் இருக் கின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியத்தினை மையப்படுத்திய களத்தில் இந்த நிலைமை நீடிக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சி.க.செந்திவேல், மற்றும் சோ.தேவராஜா ஆகியோரின் கருத்துக்களின் பிரகாரம், பழைமைவாத சிந்தனை மாற்றமும், சாதியக் கட்டமைப்பை மையப்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற பேச்சுக்கள் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிரான திறந்த கலந்துரையாடல்களும் அவசியம் என்பதை வலியுறுத்துவதாக உள்ளன.

அதேநேரம், சமூகவியல் சிரேஷ்ட விரி வுரையாளர் ஜீவசுதனினின் கருத்து, திறந்த கலந்துரை யாடல்கள் அவசியம் என்பதை சுட்டிக் காட்டினாலும், நிர்ப்பந்தங்களோ கட்டாயங்களோ இல்லாத தற்காலத்தில் உள ரீதியான மாற்றங்கள் அவசியமாகின்றன என்பதை அடிக்கோடிட்டு காண்பிப்பதாக உள்ளது.

ஆகவே திறந்த கலந்துரையாடல்கள், சிந்தனை மாற்றங்கள், சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான உபாயங்கள் செயற்றிட்டங்களாக முன்னெடுக்கப் படாத வரையில் வெறுமனே திருமண பந்தத்திற் காக மட்டுமே கையிலெடுக்கப்படும் சாதியம் அதனைத் தாண்டி அனைத்து மட்டங்க ளிலும் வியாபிக்கும் நிலை அதிகரிக்கும்.

இந்நிலையானது கருத்து வெளிப்பாட்டு க்கான பூரண சுதந்திரத்தினை கொண்டுள்ள சமூக ஊடகங்களும் ஒவ்வொரு தனிநபர் களினது கைளில் இருப்பதால் அவற்றின் ஊடான தாமதமற்ற வெளிப்பாடுகள் சமூகத் தில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடர்வதற்கு காரணமாகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04