இறுதியாக 3 கொரோனா மரணங்கள் பதிவு ! 25 மாவட்டங்களிலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

Published By: Digital Desk 4

25 Jan, 2021 | 07:24 AM
image

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 283ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக 3 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

கொழும்பு 14, மருதானை மற்றும் பூஜாப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 77, 84 மற்றும் 65 வயதானவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கொவிட் - 19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 58 000 ஐ அண்மித்துள்ள அதே வேளை கடந்த சில தினங்களாக 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் அபாயமுடைய பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த மேல் மாகாணத்தில் தற்போது தொற்றாளர்கள் இனங்காணப்படும் அளவு 50 வீதம் குறைவடைந்துள்ள போதிலும், ஏனைய மாகாணங்களில் அபாயம் அதிகரித்து வருவதாக சுகாதார தரப்புக்கள் எச்சரித்துள்ளன.

அதற்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை 25 மாவட்டங்களிலும் 843 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

கொழும்பிலேயே அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இம்மாவட்டத்தில் 197 தொற்றாளர்களும் அதற்கு அடுத்தபடியாக கண்டியில் 110 தொற்றாளர்களும் , கம்பஹாவில் 106 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை குருணாகலில் 40, காலியில் 38, இரத்தினபுரியில் 31, களுத்துறையில் 28, மாத்தளையில் 27, கேகாலையில் 24, மாத்தறையில் 22, புத்தளத்தில் 21, மன்னாரில் 15, அம்பாறையில் 13, அம்பாந்தோட்டையில் 12, வவுனியாவில் 9, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் தலா 7, பதுளை மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 4, திருகோணமலையில் 3, மொனராகலையில் 2, அநுராதபுரம் , கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தலா ஒவ்வொன்று என 25 மாவட்டங்களிலும் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை 843 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர் எண்ணிக்கை 58430 ஆக உயர்வடைந்துள்ளது.

இவர்களில் 49 684 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8463 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேளை கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 283 ஆக உயர்வடைந்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22