தமிழில் தேசிய கீதத்தை பாடுங்கள் - புதிய ஜனநாயக மக்கள் முன்னணி  ஜனாதிபதிக்கு  கடிதம்

Published By: Digital Desk 4

24 Jan, 2021 | 06:09 PM
image

தமிழில் தேசிய கீதத்தை இம்முறையேனும் இசைத்து இன நல்லிணக்கத்திற்கான நம்பகத்தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி புதிய ஜனநாயக மக்கள் முன்னணி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. 

தொடர்ந்தும் தமிழர்களை அந்நியப்படுத்தாது அவர்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள அரசு முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த கட்சியின் உப தலைவரும் ஊடக பேச்சாளருமான சமன் குமார் கூறுகையில் ,

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன கடந்த வாரம் ஊடக சந்திப்பொன்றை நடாத்தி முன்னெடுக்கப்படும் ஏற்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். எவ்வாறாயினும் அந்த ஏற்பாடுகளும் சுதந்திர தின நிகழ்வுகளும் எந்தவொரு இன மக்களையும் காயப்படுத்தி விட கூடாது என்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே எதிர்வரும் சுதந்திர தினத்தன்று தமிழிலும் தேசிய கீதத்தை பாடி அரசாங்கத்தின் தேசிய இன நல்லிணக்கத்திற்கான சமிஞ்சையை வெளிப்படுத்த வேண்டும். இதனை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் வலியுறுத்தியுள்ளோம்.

தமிழ் பேசும் மக்களும் இந்நாட்டு பிரஜைகள் . அவர்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. எனவே இந்த மக்களை தொடர்ந்தும் அந்நியப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்படாது தமிழ் மக்களின் உள்ளங்களை வெற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.

இதற்கு எதிர்வரும் சுதந்திர தினம் சிறப்பானதொரு சந்தர்ப்பமாகவே எமது கட்சி பார்க்கின்றது. பாராளுமன்றத்ததை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தை இந்த விடயத்தில் வலியுறுத்த வேண்டும். இந்த கோரிக்கையானது  தமிழ் பேசும் சமூகத்தின் அனைவரது கோரிக்கையாக இருக்க வேண்டும்.

அதேபோன்று தமிழ் சமூகத்திலும் ஒரு வேண்டுகோளை விடுக்கிறோம். பெப்ரவரி 4ஆம் திகதி உங்கள் பிரதேசங்களில் ஏற்பாடு செய்திருக்கும்  சுதந்திர நிகழ்வுகளில் தமிழிலேயே தேசியகீதத்தை பாடி எமது உரிமையை நாங்கள் பாதுகாக்குமாறு குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17