இலங்கையில் கொரோனாவுக்கு 9 சிறைக் கைதிகள் இதுவரை பலி

Published By: Digital Desk 4

24 Jan, 2021 | 04:57 PM
image

(செ.தேன்மொழி)

சிறைச்சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் தொகை 9 ஆக அதிகரித்துள்ளாதாக, சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

சிறைச்சாலைகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகுபவர்களின் வீழ்சியடைந்து வருகின்ற நிலையிலும் , புதிதாக ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

காலி சிறைச்சாலை கைதியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  எனினும் இன்றைய தினம் புதிதாக 10 தொற்றாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இவர்களுள் 9 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த விளக்கமறியல் கைதிகளாவர். மற்றையவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சிறைக்கைதிகளபவர்.

இந்நிலையில் வைரஸ் தொற்று உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 5 அதிகாரிகள் உட்பட 138 பேரே இது வரையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவ்வாறு சிகிச்சைப் பெற்றுவந்தவர்களில் 129 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 4105  பேர் குண்மடைந்துள்ளனர்.

இதேவேளை, வைரஸ் பரவல் காரணமாக சிறைச்சாலைகளில் 4 ஆயிரத்து 388 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.  அதற்கமைய 134 சிறைச்சாலை அதிகாரிகள் , 489 ஆண் சிறைக் கைதிகள் , 11 பெண் சிறைக் கைதிகள் , 3ஆயிரத்து 520 ஆண் விளக்கமறியல் கைதிகள்  , 234 பெண் விளக்கமறியல் கைதிகளுமே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46