படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டு.வில் அனுஷ்டிப்பு

Published By: Vishnu

24 Jan, 2021 | 01:16 PM
image

திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 15 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பிலுள்ள கிழக்கு  ஊடகவியலாளர் ஒன்றியத்தின் அலுவலகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம்,  யாழ். ஊடக அமையம், தெற்கு ஊடக அமையம் மற்றும் தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம்  என்பன இணைந்து ‘படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்’ என்னும் தொனிப்பொருளில் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு மலர்மலை அணிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு, நினைவுரைகளும் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ரீ. தேவ அதிரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், பா.அரியநேந்திரன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், தமிழ் தேசிய மக்கள் முன்னைனியின் தேசிய அமைப்பாளர் சுரேஸ், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் பெடி கமகே உள்ளிட்ட சகோதர இன ஊடகவியலாளர்கள், முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பி. இந்திரகுமார் மற்றும் கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33