ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாஸவின் மறைவு ஊடகத்துறை, சினிமாத்துறைக்கு பேரிழப்பாகும்..!

Published By: J.G.Stephan

24 Jan, 2021 | 10:54 AM
image

காலஞ்சென்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாஸவின் இறுதி கிரியைகளை அரச செலவில் முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். இவரது இழப்பு ஊடகத்துறை மற்றும் சினிமாத்துறைக்கு பேரிழப்பாக கருதப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கலாநிதி எட்வின் ஆரியதாஸ தனது 98ஆவது வயதில் நேற்று முன்தினம் காலமானார். பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 1922 டிசெம்பர் மாதம் 3ஆம் திகதி காலி உனவடுன பகுதியில் பிறந்த எட்வின் ஆரியதாஸ தனது ஆரம்ப கல்வியை உனவடுவ பொனவிஸ்டா பாடசாலையிலும், காலி மஹிந்த வித்தியாலயத்திலும், 1945 ஆம் ஆண்டு சிங்களம் மற்றும் ஆங்கில மொழித்துறையில் பட்டம் பெற்றுள்ளார்.

1949 மார்ச் மாதம் 8ஆம் திகதி ஊடகவியலாளராக லேக்ஹவுஸ் நிறுவனத்தில் இணைந்துக் கொண்டார். தினமின, டெய்லி நிவூஸ், சன்டே ஒப்சவர், சிலுமின மற்றும் மக்கள் பத்திரிகைகளில் ஆசிரியராக சேவையாற்றியுள்ளார். அத்துடன் லேக்ஹவுசின் நிறுவனத்தில் ஆலோசனை  பிரிவின் உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

1978 தொடக்கம் 1982ஆம் ஆண்டுகளில் நவயுகய பத்திரிகையின் பிரதான ஆசிரியராக கடமையாற்றியுள்ளார். இவர் ஊடகத்துறையில் பெரும் சேவையாற்றியுள்ளார். பிற்பட்ட காலத்தில் பல ஊடகங்கள் தோற்றம் பெறுவதற்கும் முன்னோடியாக செயற்பட்டுள்ளார். 1960ம் ஆண்டு பொதுசன தொடர்பாடல் தொடர்பிலான பாடநெறியை கற்பித்த முதல் கலாநிதியாக இவரை கருத முடியும்.

களனி பல்கலைக்கழகம், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகம் ,திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றில் ஊடகத்துறை தொடர்பான பாடநெறியை ஆரம்பிப்பதற்கு முன்னோடியாக செயற்பட்டார். ஊடகத்துறையில் பல ஊடகவியலாளர்களை இவர் உருவாக்கியுள்ளார். ஊடகத்துறை மாத்திரமல்ல பல்துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

70 வருடகாலமாக  ஊடகத்துறையில் சேவையாற்றியுள்ளார். பத்திரிகைத்  துறையில் தனது  ஊடக பணியை ஆரம்பித்த இவர் தொலைக்காட்சி, வானொலி மற்றும் சமூக வலைத்தளம் ஊடாகவும் தனது பணியை முன்னெடுத்துள்ளார்.  நடமாடும் நூலகமாக தனது அறிவாற்றலை நாட்டு மக்களுக்கு வழங்கினார். இவரது இழப்பு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09