98 ஓட்டங்களுடன் இங்கிலாந்து ; மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

Published By: Vishnu

24 Jan, 2021 | 07:56 AM
image

இலங்கை அணியுடனான 2 ஆவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் இலங்கை அணியுடன் இரு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடி வருகின்றனர்.

இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றிருந்தது.

இந் நிலையில் இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் காலி மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியானது முதல் இன்னிங்ஸுக்காக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 381 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 110 ஓட்டங்களையும், நிரோஷன் திக்வெல்ல 92 ஓட்டங்களையும், தில்றூவான் பெரேரா 67 ஓட்டங்களையும், திரிமான்ன 43 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் ஜேம்ஸ் அண்டர்சன் 40 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளையும், மார்க் வூட் 3 விக்கெட்டுகளையும், சாம் குர்ரன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

அண்டர்சனின் பந்துவீச்சு டெஸ்ட் வாழ்க்கையில் ஐந்து விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த 30 ஆவது முறையாகும். மேலும் அவர் தனது நாட்டிற்கு வெளியே விளையாடிய சிறந்த பந்துவீச்சு சாதனையாகும். 

38 வயதை எட்டிய அண்டர்சன், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காலியில் 72 ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி, சிறந்த பந்து வீச்சாளராகவும் ஆனார். 

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸுக்காக இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தது.

ஜாக் கிராலி மற்றும் டொமினிக் சிபிலி ஆகியோர் அணி சார்பில் ஆரம்ப வீரர்களாக களமிறங்கி துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க முதல் விக்கெட் நான்கு ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது. 

அதன்படி டொமினிக் சிபிலி 5 ஓட்டங்களுடன் எம்புல்தெனியவின் பந்து வீச்சில் திரிமான்னவிடம் பிடிகொடுத்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து டொமினிக் சிபிலி எதுவித ஓட்டமின்றி டக்கவுட்டுடன் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்மிழந்து வெளியேறினார்.

இதனால் இங்கிலாந்து அணி 5 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் ஜோனி பெயர்ஸ்டோவும், அணித் தலைவர் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 30 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 98 ஓட்டங்களை சேர்த்தது. ஜோ ரூட் 67 ஓட்டங்களுடனும், பெயர்ஸ்டோ 24 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

இன்னும் 283 ஓட்டங்களினால் பின்தங்கியுள்ள இங்கிலாந்து அணி இன்று 3 மூன்றாவது நாள் ஆட்டத்தில் விளையாடும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49