இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு மூவரடங்கிய குழு நியமனம் - டக்ளஸ்

Published By: Digital Desk 3

23 Jan, 2021 | 08:55 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்திய கடற்றொழிலாளர்களின் விவகாரம் தொடர்பான பரிந்துரைகளை வழங்குவத்றகு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

உயரதிகாரிகளைக் கொண்ட இக்குழு, கடற்றொழில் அமைச்சு திணைக்களங்களின் அதிகாரிகள், கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள், கடலோர காவற்படை ஆகியவற்றுடன் கலந்துரையாடி இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய செயற்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வை காண்பதற்கான பரந்துரைகளை கடற்றொழில் அமைச்சருக்கு வழங்கவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சின் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளினால் இலங்கை கடற்றொழிலாளர்கள் பாதிப்புக்களை எதிர்கொள்வதுடன், இலங்கையின் கடல் வளமும் அழிவடைந்து வருகின்றது.

இதனால், குறித்த சட்ட விரோதச் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை கடற்றொழிலாளர்களினால் தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருவதுடன் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இலங்கை கடற் படையினரால் மேற்கொள்ளபப்பட்டு வருகின்ற நிலையில், ஏற்பட்ட துரதிஸ்ட சம்பவத்தின் காரணமாக நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறான சூழலில், குறித்த எல்லை தாண்டிய செயற்பாடுகளை நிரந்தரமாக நிறுத்துவதனை நோக்கமாகக் கொண்டு குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53